என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 10-ந் தேதி தொடங்குகிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட உள்ள, இரண்டாம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று தொடங்கப்பட உள்ளது.

    மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப் பதாரர்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்கலாம்.

    இந்த இலவச பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் அலுவ லக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேடல், அரக்கோணம் பகுதியில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேடல் செம்பேடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், குமார், சுந்தரமூர்த்தி, கருணாநிதி, பிரசாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் கலந்துகொண்டு 2 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சவுந்தர், பொதுக்குழு தலைவர் கிருஷ்ணன், அவைத்த லைவர் சக்கரவர்த்தி, ஒன்றிய துணைச் செயலா ளர்கள் எஸ்.இ.போர் பாபு, பூசனம் கன்னியப்பன், பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் எம்.மூர்த்தி, குப்புசாமி, ராமலிங்கம், சுற்றுச்சூழல் ஒன்றிய துணை அமைப்பாளர் ஐயப்பன், தொழில்நுட்ப பிரிவு சந்துரு, ராகுல், தனசேகர், கிளைக் கழக செயலாளர்கள் மிலிட்டரி சுப்பிரமணி, ஏழுமலை, ராஜகோபால், சேகர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
    • கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமை நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் வீரா(எ) புருஷோத்தமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுரேஷ் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15 -ந் தேதி முதல் முன்னாள் முதல் -அமைச்சர் அண்ணா பிறந்தநாளில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கவும் நூறு நாள் வேலை திட்டத்தில் கூலி ரூ.294 ஆக உயர்த்திய முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • பைக் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் எஸ் ஆர் கே பகுதி மற்றும் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மங்கம்மா பேட்டை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 22) என்பதும், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிபில்ஸ்பேட்டை பகுதியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    பின்னர் கோடீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் போலீசார் செய்தனர்.

    • மீன் பிடித்த போது தவறி விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை பகு தியை சேர்ந்தவர் ஜமீல் பாஷா (வயது 40). பிரியாணி மாஸ்டர். நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    நேற்று அதிகாலை ஜமீல்பாஷாவை தேடி அவரது மகன் சென்றார். அப்போது குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந் தது.

    இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது ஜமீல்பாஷாவிற்கு நீச்சல் தெரியாததால் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 40).

    இவர் அதே கிராமத்தில் துப் புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவ ரது மனைவி சுமதி. மகள் பிரியா (10) மகன் தட்சன் (7) நேற்று மாலை விஜயன் தனது மகள் பிரியா மற்றும் மகன் தட்சன் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற் றிக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே குண்ணத் தூர் கிராமத்தில் உள்ள உறவி னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    ஐய்பேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த கார், விஜயன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கர மாக மோதியது. இந்த விபத் தில் விஜயன் மற்றும் அவரது மகன் தட்சன் ஆகியோர் சம் பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த பிரி யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்து வமனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தை மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மகாவீர் தெருவில் வசித்து வரும் ஜெயின் சங்கத்தின் சார்பாக ஜமாபந்தி போஜனம் நடைபெற்றது.

    இதில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி மற்றும் துணைத் தலைவர் கலாவதி லாரன்ஸ் கலந்துகொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்தனர்.

    அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் திருவிழா போன்று காட்சி அளித்தது. ஜெயின் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் அனேகர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் காந்தி முன்னிலையில் தொடங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகர திமுக சார்பில் உடன்பிறப்பாய் இணைவோம் என்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு அரக்கோணம் நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி தலைமை தாங்கினார்.

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி உத்தரவின் பேரில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி மேற்பார்வையில் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகர மன்ற உறுப்பினர்கள் துரை சீனிவாசன், கே.எம்.பி.பாபு, செந்தில் குமார், சாமு ண்டீஸ்வரி, ராஜ்குமார், ரசிதா, சங்கீதா, நந்தாதேவி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • குடிபோதையில் அட்டூழியம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வாலாஜா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் குடியிருப்பவர் அன்பரசி (வயது 35), ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர், திமிரியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குமோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது சாலையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட் டிருந்த 2 வாலிபர்களை தட்டிக் கேட்டார்.

    இதனால் அவர்கள், அன்பரசிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகரா றில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பைக்கை கீழே தள்ளி, அன்பரசி கையில் இருந்த செல்போனை பிடுங்கி கீழே வீசியுள்ளனர்.

    பின்னர் அன்பரசி திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட திமிரியை அடுத்த ராம்பாளையம் பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 22) மற்றும் 19 வயதுடைய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத் தில் ரோந்து பணியில் ஈடு படும் போலீசாருக்கு மோட் டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடை பெற்றது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, ரோந்து பணிக்காக வழங்கப்பட்டுள்ள புதிய 12 மோட்டார் சைக்கிள்களை ரோந்து காவலர்களிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு விசுவேசுவ ரய்யா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    குற்றச் செயல்களை தடுக்க இது உதவியாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர்
    • வாகனங்கள் பறிமுதல்

    ஆற்காடு:

    ஆற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளின் இருசக்கர வாகன திருட்டை தடுக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி தலைமையினான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஆற்காட்டில் உள்ள கண்ணமங்கலம் கூட்ரோடு மற்றும் மேல்விஷாரம் தனியார் கல்லூரி எதிரே ஆகிய இடங்களில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் தென்கழி கிராமத்தை சேர்ந்த தினேஷ் (வயது 22), அண்ணா மலை வயது (22), மணி (27), ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (22) என்பதும், இவர்கள் ஆற்காடு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடு பட்டதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிர்ஷ்டவசமாக 30 பயணிகள் உயிர் தப்பினர்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    காஞ்சீபுரத்தில் இருந்து வேலூர் நோக்கி ஒரு தனியார் பஸ் எம்.பி.டி சாலையில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. இதனை ராஜேந்திரன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே வரும்போது பஸ் திடீரென்று நிலை தடுமாறி சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    பஸ் பாதி கவிழ்ந்த நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்கள்.

    இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மற்றும் ஆட்கள் துணையோடு போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×