என் மலர்
நீங்கள் தேடியது "people arrested for stealing"
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர்
- வாகனங்கள் பறிமுதல்
ஆற்காடு:
ஆற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளின் இருசக்கர வாகன திருட்டை தடுக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி தலைமையினான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆற்காட்டில் உள்ள கண்ணமங்கலம் கூட்ரோடு மற்றும் மேல்விஷாரம் தனியார் கல்லூரி எதிரே ஆகிய இடங்களில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் தென்கழி கிராமத்தை சேர்ந்த தினேஷ் (வயது 22), அண்ணா மலை வயது (22), மணி (27), ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (22) என்பதும், இவர்கள் ஆற்காடு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடு பட்டதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.






