என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • திட்ட அறிக்கை தயார் செய்ய அறிவுரை
    • பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார்.

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி பஸ் நிலையம் அருகில் கலைஞர் நகரில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமுதாய கழிப்பிடம் மறுசீரமைத்தல் பணியினை ஆய்வு செய்த அவர் வருகிற 20-ந் தேதிக்குள் பணியினை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

    திருப்பாற்கடல் மயானத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.1.31 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டும்பணியினை பார்வையிட்ட அவர் பணிகளை வரும் 31-ந் தேதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூறினார்.

    மேலும் தகன மேடை அருகில் பயோ கேஸ் பிளான்ட் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து பணி மேற்கொள்ள வும் அறிவுறுத்தினார்கள்.

    தொடர்ந்து, காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு மையத்தினை ஆய்வு செய்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் உரம் தயாரித்தல் பணி போன்ற திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் உடனிருந்தார்.

    • சு.ரவி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தக்கோலம், சேந்தமங்கலம், அருகில பாடி, அரக்கோணம் நகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டது.

    சு.ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் ஒன்றிய மாணவரணி செயலாளர் வழக்கறிஞர். ஆர். பிரகதீஸ்வரன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட இளைஞரணி இணை செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் எல். வினோத்குமார் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் என். சங்கர், அவைத் தலைவர் தயாளன், பேரூராட்சி செல்வம், மாவட்ட பாசறை செயலாளர் கே. அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெமிலி ஏ.ஜி. விஜயன், அரக்கோணம் பிரகாஷ், மாவட்ட ஜெ. பேரவை துணைத் தலைவர் ஆட்டுப்பாக்கம் ஏ.வி. ரகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    அரக்கோணம் நகர கழக செயலாளர் பாண்டுரங்கன், இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் ஷாம்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நோய் பரவும் அபாயம்
    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை

    ஆற்காடு:

    ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட தேவி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வீட்டின் முன்பு தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியனிடம் புதியதாக கழிவுநீர் கால்வாய் கட்டித் தரும்படி கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேவி நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் பணிகளை விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார். அப்போது நகர மன்றம் உறுப்பினர்கள் ஆனந்தன் முனவர்பாஷா உள்பட பலன் உடன் இருந்தனர்.

    • பிரதமர் மோடி வருகையையொட்டி ஏற்பாடு
    • பாதுகாப்பு பணிகள் தீவிரம்

    அரக்கோணம்:

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக் கோணம் மார்க்கமாக கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    இதனை முன்னிட்டு அரக் கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந் தன், செந்தில் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப், சப்-இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார் தலைமையி லான போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், பிளாட்பாரம் மற்றும் தண்டவாளங்களில் தீவிர சோதனை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    • காரில் இருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டி ருந்தது. காரை சந்தோஷ என்பவர் ஒட்டி சென்றார்.

    அப்போது கடப்பந்தாங்கல் கிராம எல்லைக்குட்பட்ட ஆற்காடு -செய்யாறு சாலையில் வரும்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்த சந்தோஷை காயமின்றி பத்திரமாக மீட்டனர்.

    இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    • நூதன முறையில் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பாய் (வயது 65). கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக ஆற்காடு வரை நேற்று மதியம் பஸ்சில் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து வெங்கடாபுரம் செல்வ தற்காக ஆற்காடு பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் ராம்பாய்யிடம் ஒரு பேப்பரை கொடுத்து இதை சிறிது நேரம் வைத்திருங்கள் பின்னர் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த மூதாட்டி பேப்பரை வாங்கி வைத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் மூதாட்டி சுயநினைவு இழந்தார். அப்போது அந்த நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த மூதாட்டி நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 21 பயனாளிகள் பயனடைந்தனர்
    • அதிகாரி தகவல்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளுர் கிராமத்தில் வீடற்ற 21 ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை பள்ளுர் குறவர் காலனியை சார்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிர மிப்பு செய்து விவசாயம் செய்துவந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது அந்த நபர் இந்த இடத்தை விட்டு செல்லுங்கள், இல்லையென்றால் தற்கொலை செய்துகொள் வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் வருவாய் ஆய்வாளர் பிள்ளையார் தலைமையில் ஆக்கிரமிப்பை அகற்றி பயனாளிக ளுக்கு வீட்டுமனை அளவீடு செய்து கல்நடும் பணி நடை பெற்றது.

    அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நெமிலி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 21 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இலவச தையல் எந்திரம் வழங்க மனுக்கள் பெறப்பட்டது
    • நலத்திட்ட உதவிகளை அதிகாரி வழங்கினார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கோட்ட அளவிலான சிறப்பு மனு நீதி நாள் முகாம் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

    மாற்று திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக கோட்டாட்சியர் பாத்திமா கலந்து கொண்டு பேசுகையில் வீடு இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த சொத்துக்களும் இல்லாத நிலையில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, பட்டா இருந்தும் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்படும் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு தையல் பயிற்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு மின் மோட்டார் பொருந்திய இலவச தையல் எந்திரம் வழங்க மனுக்கள் பெறப்பட்டது.

    பின்னர் 3 சக்கர சைக்கிள், காதலிக்கருவி, ஊன்று கோல், மற்றும் சேர் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் பாத்திமா பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கந்திர் பாவை, போலியோ பிளஸ் சேர்மன் வெங்கடரமணன், தமிழ் படைப்பாளிகள் சங்கத் தலைவர் மோகன், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் பிரபாகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த வளவனூர் பகுதியில் பாலாற்று படுகையில் மணல் அள்ள அரசு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பாலாற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையிலான பொதுமக்கள் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி, பொக் லைன் எந்திரத்தை சிறை பிடித்து முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இப்பகுதியில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.

    குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் மணல் அள்ளக்கூடாது. மீறி மணல் எடுத்தால் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொக் லைன் எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த திடீர் முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 1 கிலோ பறிமுதல்
    • வாகன சோதனையில் சிக்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ரெட்டைகுளம் பகுதிகளில் கஞ்சா விற்பதாக அரக்கோ ணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனி வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள புதர் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் காஞ்சீபு ரம் மாவட்டம் சுங்குவார்சத் திரம் பகுதியை சேர்ந்த ஜாகீர் என்கிற ஜாகீர் உசேன் (வயது 20), அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் பகுதியை சேர்ந்த சாருன் பாலசந்திரன் (20) என்பதும், இவர்கள் கஞ்சா விற்க முற்பட்டதும் விசார ணையில் தெரியவந்தது. இத னையடுத்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். ஜாகீர் உசேன் மீது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் இருப்பது விசாரனையில் தெரிய வந்தது.

    • எல்லையை மறு வரையறை செய்ய வலியுறுத்தல்
    • 40 பேர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு

    ராணிப்பேட்டை:

    லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலையில் கிராம எல்லையை மறு வரையறை செய்யக்கோரி நேற்று லாலாபேட்டை சாவடி அருகே பொன்னை மெயின் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலை வர் கோகுலன், கோடீஸ்வரன், ஜெயசீலன் மோகன், தேவேந் திரன், சுப்பிரமணி, எல்.வி.மணி உள்ளிட்ட பலர் மீது கிராம நிர்வாக அலுவலர் கல்யாண குமார் கொடுத்த புகாரின் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே காஞ் சனகிரி மலைக்கோவில் உள்ளது.

    இந்த மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வருகிறது.

    இந்தநிலையில் நேற்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 தரப்பினரும் தனித்தனியே சிப்காட் போலீசில் புகார் செய்தனர்.

    முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற துணத்தலைவர் சுரேஷ் என்பவர் அளித்த புகாரில், லாலாபேட்டை மலை கோவில் வேலையை மேகநாதன் என்பவர் கவனித்து வந்ததாகவும், இந்தநிலையில் லாலாபேட்டையை சேர்ந்த கோடீஸ்வரன், பாலமுருகன், சந்திரன், பரந்தாமன், ஜெயக்குமார், மதி, விஜி, குணா உள்ளிட்டோர் பூட்டை உடைத்து சென்றுள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிப்காட் போலீசார் கோடீஸ்வரன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல் லாலாபேட்டை சேர்ந்த பாலமுருகன் என் பவர் அளித்துள்ள புகாரில் நேற்று பங்குனி உற்சவத்தை முன் னிட்டு மலை கோவிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில், சமையல் வேலை செய்து கொண்டிருக்கும்போது, தன்னை அக்ராவரவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற செயலாளர் வினோத் ஆகியோர் தாக்கியதாகவும், இன்னொரு முறை இங்கு வந்தால் உயிரோடு போக மாட்டாய் என மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் அக்ராவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், முகுந்தராயபுரம் ஊராட்சி செயலாளர் வினோத் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×