என் மலர்
ராணிப்பேட்டை
- 12 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
வாலாஜாப்பேட்டை அடுத்த கடப்பந்தாங்கல் அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கோழிகளை ஏற்றி கொண்டு லோடு ஆட்டோ இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது செல்போன் தொழிற்சாலைக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று ஆட்டோ பின்னால் வந்து கொண்டிருந்தது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்ஸில் பயணம் செய்த 12 பேர் லேசான காயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு
வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பள்ளி கட்டிடம் இல்லாததால் ஆத்திரம்
- மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்
அரக்கோணம்:
நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு 40- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கட்டிடத்தை முழுவதும் இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கிருந்த மாணவர்களை அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை இதுவரைக்கும் தொடங்கவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
பள்ளியை உடனடியாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை பள்ளியை கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டாவது முறையாக பள்ளியை புறக்கணித்து வருகின்றனர். இதனால் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது.
உடனடியாக அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் புறக்கணித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெமிலி பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
- வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
திமிரி அடுத்த நம்பரை கிராமத்தை சேர்ந்தவர் ஆதிகேச வன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று இரவு திமிரி யில் இருந்து ஆற்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென் றுள்ளார். அதேபோல் கலவையை அடுத்த மேச்சேரி பகுதி யைச் சேர்ந்த பூவேந்தன் (26), விக்னேஷ் (26) ஆகிய இருவரும் ஆற்காட்டில் இருந்து திமிரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். ஆற்காடு அடுத்த விளாபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வரும்போது 2 மோட்டார் சைக்கிளும்' நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமம், பெரிய தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 54) விவசாயி.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து நெமிலி செல்வதற்காக சாலையை கடந்த போது எதிரே வந்த மோட் டார்சைக்கிள் அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பலி
பின்னர் மேல் சிகிச்சைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளை மறுநாள் தொடங்குகிறது
- 27-ந் தேதி வரை நடக்கிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நாளை மறுநாள் தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
12-ந் தேதி (புதன்கிழமை) தமிழ், 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கிலம், 19-ந் தேதி (புதன்கிழமை) கணிதம், 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அறிவியல், 24-ந் தேதி (திங்கட் கிழமை) சமூக அறிவியல், 27-ந் தேதி (வியாழக்கிழமை) உடற் கல்வி தேர்வுகள் நடைபெறுகிறது.
6 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், 7 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். தேர்வுகளை தலைமை ஆசிரியர்கள் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காதபடி நடத்திட வேண்டும்.
வினாத்தாள் எண்ணிக்கையினை நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணி அளவில் வினாத்தாள் கட்டு காப்பு மையத்தில் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை 8 மணி அளவில் அன்றைய தேர்வுக்குரிய வினாத் தாள்களை பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்களுக்கு திருப்புதல் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்துள்ளார்.
- அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி நடந்தது
- 300-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் அம்பேத்கர் 132 வது பிறந்தநாள் விழா, அன்னை மருத்துவமனை மற்றும் அன்னை பல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு அம்பேத்கர் மன்ற செயல் தலைவர் அருள்மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் மோகன், மன்ற தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
டாக்டர் ஸ்வப்னா மேற்பார்வையில் பல், மற்றும் கண் பரிசோதனை ரத்த கொதிப்பு பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த வகை கண்டறிதல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதயம் மற்றும் எலும்பு நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
ஓய்வு பெற்ற போலீஸ் டோமினிக் சேவியோ, டவுன் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, கிருஷ்ணா கல்வி குழும செயலாளர் ரவிக்குமார், அரசு மருத்துவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் ரவி நன்றி கூறினார்.
- மின்சாரம் தாக்கியதில் உடல் கருகியது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று மதியம் 7-வது பிளாட்பாரத்தில் புறநகர் ரெயில் நின்றிருந்தது.
அப்போது மதுபோதை யில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் பெட்டியின் கூரை மீது ஏறி மின் ஒயரை பிடித்தார்.
இதில் அவர் மின் சாரம் தாக்கியால் உடல் கருகி தூக்கி வீசப்பட்டார்.
அப்போது ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் அன்புசெழியன், ஆனந்தன் தலைமையி லான போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தில் அந்த வாலிபர் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அபிலேஷ் (வயது 27) என்பதும், தாய் மற்றும் தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்தால் குடி பழக்கத்திற்கு ஆளாகி சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து ரெயில்வே போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- நாய்கள் கடிக்க துரத்தியது
- பொதுமக்கள் மீட்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கும்பினி பேட்டை வன பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வழிதவறி மான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. மானை நாய்கள் துரத்தி சென்றன.
இதை கண்ட பொது மக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டனர். இதனை தொடர்ந்து பொது மக்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை வனத்துறையினர் சென்று மானை மீட்டு சென்றனர்.
- பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வராததால் ஆத்திரம்
- போக்குவரத்து பாதிப்பு
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருமாரியம்மன் கோவில் தெரு பகு தியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது.
மேலும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு சில தெருக்களில் குடிநீர் சரியாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட் டோர் வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் வேப்பூர் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள அப்துல்லாபு ரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 28), பொக்லைன் ஆபரேட்டர். இவர், நெல்லிக்குப்பம் அருகே பணியில் இருந்த போது லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக லாலாபேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் அவர் லாலாபேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்துள்ளார். உடனே அவர் சிகிச் சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக் டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அலுமினிய பொருட்கள் அபேஸ்
- போலீசுார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டைமாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கயூம் (வயது 39). இவர் அதேப் பகு தியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக பயிற்சி பள்ளியை திறக்காமல் மூடியே வைத்துள்ளார். பின் னர் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து உள்ளார். அப்போது பயிற்சி பள்ளியின் உள்ளே வைக்கப்பட்டிருந்த அலுமினிய பொருட்கள், ஒயர் மற்றும் கருவிகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அப்துல் கயூம், ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த அன்சாரி (21) என்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசா ரணையில் அவர் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் திருடியது தெரியவந்தது. அதைத்தொ டர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- கம்பிகள் துருபிடித்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, மேலபுலம் ஊராட்சி, கீழ்குறுக்கு தெருவில் 500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள டிரான்ஸ் பார்மர் மின் கம்பத்தில் சிமெண்டு பூச்சு உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் கம்பிகள் துருபிடித்து கீழே விழும் நிலையில் உள்ளது.
அதன்காரணமாக அந்த வழியே செல்லும் வாகன ஒட்டிகள், பள்ளி, கல்லூரி செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
எனவே அபாய நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






