என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- கம்பிகள் துருபிடித்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, மேலபுலம் ஊராட்சி, கீழ்குறுக்கு தெருவில் 500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள டிரான்ஸ் பார்மர் மின் கம்பத்தில் சிமெண்டு பூச்சு உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் கம்பிகள் துருபிடித்து கீழே விழும் நிலையில் உள்ளது.
அதன்காரணமாக அந்த வழியே செல்லும் வாகன ஒட்டிகள், பள்ளி, கல்லூரி செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
எனவே அபாய நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






