என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது போதையில் ரெயில் கூரை மீது ஏறிய வாலிபர்
    X

    மின் சாரம் தாக்கிய வாலிபரை படத்தில் காணலாம்.

    மது போதையில் ரெயில் கூரை மீது ஏறிய வாலிபர்

    • மின்சாரம் தாக்கியதில் உடல் கருகியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று மதியம் 7-வது பிளாட்பாரத்தில் புறநகர் ரெயில் நின்றிருந்தது.

    அப்போது மதுபோதை யில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் பெட்டியின் கூரை மீது ஏறி மின் ஒயரை பிடித்தார்.

    இதில் அவர் மின் சாரம் தாக்கியால் உடல் கருகி தூக்கி வீசப்பட்டார்.

    அப்போது ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் அன்புசெழியன், ஆனந்தன் தலைமையி லான போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தில் அந்த வாலிபர் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அபிலேஷ் (வயது 27) என்பதும், தாய் மற்றும் தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்தால் குடி பழக்கத்திற்கு ஆளாகி சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

    முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இது குறித்து ரெயில்வே போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×