நெமிலி கீழ் வீதி கிராமத்தில் மாணவர்கள் மறியல்

பள்ளி கட்டிடம் இல்லாததால் ஆத்திரம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்
மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.
மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.
Published on

அரக்கோணம்:

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு 40- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கட்டிடத்தை முழுவதும் இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கிருந்த மாணவர்களை அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை இதுவரைக்கும் தொடங்கவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

பள்ளியை உடனடியாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை பள்ளியை கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டாவது முறையாக பள்ளியை புறக்கணித்து வருகின்றனர். இதனால் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது.

உடனடியாக அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் புறக்கணித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெமிலி பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

X

Maalai Malar
www.maalaimalar.com