என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • மருந்து தெளிக்கப்பட்டது
    • அதிகாரிகள் ஆய்வு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்புலிப்பாக்கம் பகுதியில் 30-க்கும் மேற்பட்டோர் கொசு உற்பத்தி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வீடுகளின் பின்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டியில் கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப் பட்டது. தொடர்ந்து பழைய டயர், உடைந்த பாட்டில்கள், டீ கப்புகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

    இதில் சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஒரு ஏக்கர் கரும்பும் தீயில் கருகியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த சித்தேரி வட களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இவர் தனது விவசாய நிலத்தில் சுமார் 10 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.

    கரும்பு வெட்டும் எந்திரம்

    இந்த நிலையில் நேற்று கரும்பு வெட்டுவதற்காக அரக்கோணம் வாணியம்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரது கரும்பு வெட்டும் எந்திரம் மூலம் கரும்பு வெட்டப்பட்டது.

    கும்பகோணம் பகுதியை சேர்ந்த டிரைவர் நெல்சன் (32). என்பவர் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது, கரும்பு வெட்டும் எந்திரத்தின் உயரமான முன் பகுதி விவசாய நிலத் தில் செல்லும் மின் ஒயரில் உரசியது.

    இதில் மின் கசிவு ஏற் பட்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கரும்பு வெட்டும் எந்திரம் தீ பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது.

    இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதியில் கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சோளிங்கரில் இருந்து தீய ணைப்பு வீரர்கள் வந்தனர். அப்போது அரக்கோணம் தீய ணைப்பு வீரர்களும் வந்தனர். இருவரும் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    இதில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான கரும்பு பயிரும் கருகியது. டிரைவர் நெல்சன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு சார்பில் பணியாளர்கள் கொண்டு பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் என்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலம் கருமாரியம்மன் கோவில் கூட்டு சாலையில் இருந்து பஸ் நிலையம் வழியாக அண்ணா சிலை காந்தி ரோடு சென்று தபால் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

    பேரணியில் பயண்படுத்தும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், உருஞ்சுகுழாய்கள் ஒழிப்போம், பிளாஸ்டிக் பொருட்கள் பயண்படுத்து வதை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக பிளாஸ்டிக் பயண்பாட்டிற்கு எதிராக உறுதிமொழியினையும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பையை பயண்படுத்துவோம் என உறுதி மொழி ஏற்றனர்.

    இந்த பேரணியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் தனியார் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக் கம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியில் தனி யாருக்கு சொந்தமான கடலை மிட்டாய் மற்றும் தின்பண் டங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.

    இங்கு தயாரிக்கப் படும் கடலை மிட்டாய் மற்றும் தின்பண்டங்கள் பல மாநி லங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இப்பகுதியில் மின் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் ஜெனரேட்டர்கள் மூலம் கம்பெனி இயங்கியது. ஒரு கட்டத்தில் ஜெனரேட்டரும் பழுதானது. இதனால் ஆயில் டெம்பரேச்சர் அதிகமாகி தீப்பற்றி எரிந்தது.

    இது குறித்து ஆற்காடு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை மேலும் பரவ விடாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர்.

    இந்த திடீர் தீ விபத்தினால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் சார்பில், தனியார் தொழில் நிறுவன பணியாளர்கள் பங்கு பெற்ற பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் ராணிப்பேட்டையில் நடந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் வளர்மதி கொடிய சைத்து தொடங்கிவைத்தார்.

    முன்னதாக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியினையும், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக அனைவரும் மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில், அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    முதல்- அமைச்சர் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பதற்காக மீண்டும் மஞ் சப்பை திட்டத்தினை தொடங்கி வைத்தார். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்து வதை நாம் அனைவரும் தவிர்க்க வேண்டும். நம் வீட் டில் உள்ள குப்பைகளை மக் கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே இதுகுறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் குழந்தைகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். எதிர்கால தலைமுறையினருக்கு தூய் மையான சுற்றுப்புறத்தை வழங்கிட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சுற்றுச்சூ ழல் விழிப்புணர்வு தோரணம், பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணர்வு கருத் துக்களை முழங்கிக்கொண்டு நகரத்தின் முக்கிய வீதி வழியாக சென்று ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையத்தை அடைந்தனர்.

    இதில் தமிழ்நாடு மாசு கட் டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இறந்தவர் யார்? என்று அடையாளம் ெதரியவில்லை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது பிளாட் பாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பட்டபகலில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள மங்கலம் கிராமம், ரோட்டு தெருவில் வசித்து வருபவர் துரை சாமி மனைவி சம்பத்து அம்மாள். இவர் நேற்று மதியம் பக்கத்து தெருவில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 12 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது.

    உடனே இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சப்- இன்ஸ்பெக்டர்ராஜா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பட்டபகலில் நடந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மின் கம்பியில் லாரி உரசியதால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த புலித்தாங்கல் கிராம அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 38), லாரி டிரைவர்.

    இவர் நேற்று காலை தென்கடப்பந்தங்கல் பகுதியில் உள்ள கல் குவாரியில் டிப்பர் லாரியின் தொட்டியை தூக்கியபோது எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசி உள்ளது.

    இதில் பாலசுந்தரம் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதம்
    • மாற்று இடம் வழங்கப்படமாட்டாது என தெரிவித்ததால் பரபரப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதிக்குட்பட்ட மேய்க்கால் புறம்போக்கில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டியி ருப்பதாக அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் அரக்கோணம் உதவிபோலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அங்கு மேய்க்கால் புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டி ருந்த 4 குடிசை வீடுகளை அகற்றி, சுமார் 21 ஆயிரம் சதுர அடி இடத்தை மீட்டனர்.

    அப்போது ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டியிருந்த உரிமையாளர்கள் வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தாசில்தார் சண்முகசுந்தரம் கூறுகையில்:-

    மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி இடத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது. இங்கே வீடு கட்டியிருந்த 4 பேருக்கும் மாற்று இடம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 249 மனுக்கள் பெறப்பட்டன
    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக ளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு. குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கூட்டுறவு கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொது மக்கள் மனு அளித்தனர். மொத்தம் 249 மனுக்கள் பெறப்பட் டது.

    அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலாக ளிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    • நிலம் அளவீடு, மதிப்பீடு செய்வது குறித்து விளக்கம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பொறியியல் மற்றும் கண்காணிப்பு குறித்து 2 நாள் அடிப்படை பயிற்சி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தொடங்கியது தொடங்கியது.

    முதல் நாளான நேற்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நிலத்தை அளவீடு செய்வது, மதிப்பீடுகள் தயாரிப்பது, சாலை அமைக்கும் போது அதன் பொறியியல் தொழில்நுட்பங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவரா மன், பாஸ்கரன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ், ஒன்றிய பணி பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • தேங்காய் மற்றும் பூசணிக்காயில் தீபம் ஏற்றினர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த பள்ளூர் கிராமத்தில் பழமை வாய்ந்த வராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமியை அடுத்த 5-வது நாளில் கிருஷ்ண பஞ்சமி என்கிற தேய்பிறை பஞ்சமி வழிபாடு நடை பெற்றுவருகிறது.

    இந்த மாதத்திற்கான தேய்பிறை பஞ்சமி வழி பாடு நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயில் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

    நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் குடும்பத்தில் உள்ள பிரச் சினை, குழந்தையின்மை, திருமண தடை, தொழில் தடை ஆகியவை விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இந்த பஞ்சமி வழிபாட்டில் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×