என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குணமடையும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது இந்தியா முழுவதிலும் தினசரி கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    எனவே மக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிப்பு அடையாமல் தங்களை பாதுகாத்து கொள்ள பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

    தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், அவ்வப்போது கைகளை சுத்தமாக சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் மற்றும் காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடம்பு வலி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொரோனா பரிசோதனை செய்து, தொற்று உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

    கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குணமடையும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்த நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து நலமுடன் வாழ வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்காப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பணியின் போது உயிரிழந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் ஒரு வாரம் தீ தொண்டு வாரமாக அனுச ரிக்கப்படுகிறது.

    அதன்படி அரக்கோணம் தீயணைப்புதுறை யினர் சார்பில் சிறப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலை மையில் வீரர்கள் தீ தொண்டு நாள் நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தீயணைப்பு கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    அப்போது நிலைய அலுவலர் விஜயகுமார் விபத்தில் காயமடைந்தோருக்கு முதலுதவி, வெள்ளத்தில் இழுத்துச் செல்வோரை காப்பாற்றுவது, அடுக்குமாடி குடி யிருப்பு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, சமையல் எரிவாயு கசிந்து தீப்பற்றினால் தற்காப்பு உள்பட பல வழிமு றைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீ விபத்துக்கள் ஏற் பட்டால் எவ்வாறு செயல்படுவது என குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

    • அம்மனுக்கு மலர் அலங்காரம்
    • ஏராளமானோர் தரிசனம்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவி லில் தமிழ் புத்தாண்டை முன் னிட்டு நேற்று சிறப்பு பூஜை கள் நடந்தது.

    காலையில் அம்மனுக்கு நெய், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற் றினர்.

    இரவு அம்மன் மலர்க ளால் அலங்காரம் செய்யப் பட்டு வீதியுலா வந்தது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விடுமுறை நாட்களில் பணியாளர்கள் முறையாக பணியில் உள்ளனரா? என சோதனை
    • வெயிலில் நீண்ட நேரம் விளையாட வேண்டாம் என அறிவுரை

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட் கலெக்டர் வளர்மதி நேற்று ராணிப்பேட்டை காரை அரசினர் சிறுவர்களுக்கான குழந்தைகள் இல்லத்தில் விடுமுறை நாட்களில் பணியாளர்கள் முறையாக பணியில் உள்ளனரா? என்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து அவர்களிடம் படிப்புகள் குறித்து கேட்டறிந்து உரையா டினார். தற்போது நிலவும் அதிகமான கோடை வெயி லில் வெளியில் சென்று நீண்ட நேரம் விளையாட வேண்டாம் என தெரிவித்தார்.

    மேலும் தற்போது நடை பெற்றுவரும் தேர்வுக்கு அனைவரும் நல்ல முறையில் தயார் செய்து நல்லபடியாக தேர்வுகளை எழுத வேண்டும். என்றார். மேலும் இல்லத்தில் உங்களுக்கான அடிப்படை வசதிகள், உணவு மற்றும் பிற வசதிகள் சரியாக உள்ளதா?

    என கேட்டதற்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை என குழந்தைகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மாணவர்கள் தங்கும் அறை யையும், சமையல் கூடத்தி னையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அங்கிருந்த மருத்துவ அலுவலரிடம் குழந்தைக ளுக்கு முறையான உடற் பரி சோதனைகள் செய்யப்படுகிறதா? என கேட்டறிந்தார். அனைவருக்கும் கண் மற்றும் இதர பரிசோதனைகள் முறை யாக செய்யப்படுகிறது. ஒரே ஒரு சிறுவனுக்கு மட்டும் சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளது.

    அவனுக்கு அரசு மூலம் மருந்து மற்றும் மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு உடல் நலன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி அனைத்து சிறுவர்களும் நல முடன் உள்ளனர் என இல்ல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆய்வின்போது சிறுவர் இல்ல மருத்துவ அலுவலர் உதயகுமார் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உடனி ருந்தனர்.

    • 25 பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ரணிப்பேட்டை மாவட் டம், பனப்பாக்கம் பஸ் நிலைய பின்புறம் உள்ள புளியந்தோப்பு பகுதியில் அரசு மதுபாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்ப தாக தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் பிரபாகரனுக்கு தக வல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

    அப்போது பெண் ஒருவர் மதுவை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2,500 மற்றும் 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் விசாரணை
    • சித்தப்பாவுடன் சென்ற நிலையில் பரிதாபம்

    ஆற்காடு:

    ஆற்காடு வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சேதுரா மன். இவரது மகன் தீபேஷ் (வயது 16). ஆற்காட்டில் உள்ள ஒரு நிதியுதவி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மதியம் மாணவனின் சித்தப்பா லாரி டிரைவரான நந்தகுமார் தனது லாரியில் புளிய மர விறகுகளை ஏற்றிக் கொண்டு மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தோல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளர்.

    அவருடன் மாணவன் தீபேசும் சென்றுள்ளான். தோல் சுத்திகரிப்பு நிலையத் தின் கேட் பகுதியில் மாண வனை இறக்கிவிட்டு விட்டு, நந்தகுமார் உள்ளே சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது திபேசை காணவில்லை.

    அப்பகுதியில் தேடிபார்த்தபோது பயன்பாட்டில் இல்லாத ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் தேங்கியிருந்த மழைநீரில் மாணவன் தீபேஷ் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவன் எப்படி தொட்டியில் விழுந்து இறந் தான் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • அத்தியாவசிய மருந்துகள் குறித்து சோதனை
    • உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் இடிப்பது குறித்து ஆலோசனை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனை யில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது நோயா ளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் நாள் தோறும்சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அத்தியாவசிய மருந் துகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பழுதடைந்துள்ள உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை இடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் கட்டிடத்தை இடிக் கும்போது நகராட்சியில் உள்ள ஒருகட்டிடத்தை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றும் படி கேட்டுக்கொண்டார்.

    சோளிங்கர் அருகே உள்ள மோட்டூரை சேர்ந்த லோகநாயகி என்பவர் தனது மகன் சச்சின் (வயது 9) தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் கலெக்டர் வளர்மதியிடம் கண்ணீர்மல்க கூறினார்.

    அதற்கு கலெக்டர் திங்கட்கிழமை நடக்கும் குறை தீர்வு கூட்டத்திற்கு வந்து அட்டை பெற்றுக்கொள்ளும்படியும், இல்லம் தேடி மருத்துவம் மூலம் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படியும் கூறினார்.

    • கலெக்டர் தகவல்
    • நேரடியாக அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாட்டில் சொந்த கட்டி டங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத் தல் பணிகள் திட்டத்தின் கீழ் தேவாலயத்தில் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத் தின் வயதிற்கேற்ப மானியத் தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

    அதன் படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை அமைத் தல், குடிநீர் வசதிகள் உருவாக் குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளலாம். தேவா லய கட்டிடத்தின் வயதிற் கேற்ப 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்க ளுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.2 லட் சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாக வும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும். உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக பூர்த்தி செய்து வழங்கப்படும் விண்ணப்பங் களை கலெக்டர் தலைமையிலான குழு அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, தேவாலயங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்வார்கள்.

    கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகிய வற்றுடன் தகுதியின் அடிப்ப டையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறு பான்மையினர் நல இயக்குன ருக்கு நிதியுதவி வேண்டி பரிந் துரை செய்யப்படும்.

    நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். ராணிப்பேட்டைமாவட்டத் தில், இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொள்ளலாம்.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒரு வர் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சப் - இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்றும், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு
    • குழந்தை திருமண பாதிப்புகள் குறித்து விளக்கம்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி ஒன்றியத்துக்கு உட் பட்ட கீழ்வெங்கடாபுரம் கிரா மத்தில் நேற்று சமூக பாதுகாப் புத்துறையின் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரி யர் சாந்தி, துணைத்தலைவர் கண்ணகி தனசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராகநெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி ஆசிரியர்களும், பெற்றோரும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

    போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவைக்கு அடிமையாகா மல் இருக்க குழந்தைகளை தின மும் கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணத்தின் பாதிப்புகள் பற்றி பெற்றோருக்கு விவரமாக எடுத்துக் கூறினார்.

    இதில் செவிலியர் மீகாள்கு மாரி, அங் கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை விவேகா னந்தர் தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் வாலாஜா போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஹேமந்த்குமார் (வயது 31). என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது.

    அவரை பிடித்து விசாரணை நடத்திய போது ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அதனை இருசக்கர வாகனத்தில் வைத்து வாலாஜா அடுத்த சாத் தம்பாக்கம் கிராம ஏரிக்கரை யோரம் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது.

    பின்னர் ஹேமந்த் குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிரியர் வலியுறுத்தல்
    • கட்டிடம் கட்டக்கோரி வகுப்பு புறக்கணிப்பு

    நெமிலி:

    நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிட பள்ளி இயங்கிவருகிறது. இங்கு மொத்தம் 44 மாணவர்கள் கல்வி படித்து வருகின்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிக் கட்டிடம் பழுதடைந்துள்ள தாக கூறி இடித்து அப்புறப்ப டுத்தப்பட்டது. 2 ஆண்டுக ளாக வாடகை கட்டிடத்தில் பள்ளிக்கூடம் இயங்கிவரு கிறது. புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டது. ஆனால் 2 ஆண் டுகள் ஆகியும் கட்டிடம் கட் டும் பணியை தொடங்க வில்லை. இதனால் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து வருகின்றனர்.

    சம்மந்தப்பட்ட அதிகா ரியை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது இன் னும் கூடுதலாக நிதி தேவைப டுகிறது. அது இன்னும் 20 நாட் களில் வந்துவிடும். அதன்பின் னர் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று கூறி னார்.

    ஆனால் இன்னும் 4 நாட்களில் தேர்வு தொடங்கப் பட உள்ள நிலையில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்வது அவர்களின் எதிர்கா லத்தை பாதிக்கும் என்றும், மாணவர்களின் எதிர்கா லத்தை கருத்தில்கொண்டு பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவேண்டும். என்று அப்பள்ளியின் ஆசிரி யர் கூறினார்.

    ×