என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிக்கு அனுப்ப வேண்டும்"
- ஆசிரியர் வலியுறுத்தல்
- கட்டிடம் கட்டக்கோரி வகுப்பு புறக்கணிப்பு
நெமிலி:
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிட பள்ளி இயங்கிவருகிறது. இங்கு மொத்தம் 44 மாணவர்கள் கல்வி படித்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிக் கட்டிடம் பழுதடைந்துள்ள தாக கூறி இடித்து அப்புறப்ப டுத்தப்பட்டது. 2 ஆண்டுக ளாக வாடகை கட்டிடத்தில் பள்ளிக்கூடம் இயங்கிவரு கிறது. புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டது. ஆனால் 2 ஆண் டுகள் ஆகியும் கட்டிடம் கட் டும் பணியை தொடங்க வில்லை. இதனால் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து வருகின்றனர்.
சம்மந்தப்பட்ட அதிகா ரியை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது இன் னும் கூடுதலாக நிதி தேவைப டுகிறது. அது இன்னும் 20 நாட் களில் வந்துவிடும். அதன்பின் னர் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று கூறி னார்.
ஆனால் இன்னும் 4 நாட்களில் தேர்வு தொடங்கப் பட உள்ள நிலையில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்வது அவர்களின் எதிர்கா லத்தை பாதிக்கும் என்றும், மாணவர்களின் எதிர்கா லத்தை கருத்தில்கொண்டு பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவேண்டும். என்று அப்பள்ளியின் ஆசிரி யர் கூறினார்.






