என் மலர்
ராணிப்பேட்டை
- 247 மனுக்கள் பெறப்பட்டன
- நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 247 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை மேற் கொள்ளவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.10,500 மதிப்பி லான 3 சக்கர சைக்கிள் மற்றும் நெமிலி ஒன்றியம் கணப திபுரத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவருக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது,
கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மூலவர் ஆதி மஹாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
- வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
திருவலம் அருகே உள்ள கெம்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 63). இவர் ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் காவலாளி யாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் உடல்நலம் இல்லாமல் இருந்த இவர் நேற்று தொழிற்சாலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து துளசிராமனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து துளசிராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொசுமருந்து அடிக்கப்பட்டது
- முகக் கவசம் பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் வலியுறுத்தல்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட் டம், பனப்பாக்கம் பேரூராட் சியில் 15 வார்டுகள் உள்ளன. மொத்தம் 11 ஆயிரத்து 536 பேர் வசித்து வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரவிவருகிறது. இதனை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை தமிழக அரசு ஏற்படுத்திவருகிறது.
நேற்று பனப்பாக்கம் பேரூ ராட்சியில் உள்ள 2-வது வார் டில் உள்ள திருமுருகன் நகர், முத்தீஷ்வரர் நகர், நேதாஜி நகர், எஸ்.ஜி.பி. நகர், மாணிக் கம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 174 வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க கொசுமருந்து அடிக்கப்பட்டது.
மேலும் கொரோனா காய்ச்சல் பரவாமல் இருக்க வீடுதோறும் நிலவேம்பு கசா யம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியில் வசிக்கும் அனைவரும் முகக் கவசம் பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
- வேலையை முடித்து விட்டு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 28). இவர் ராணிப் பேட்டை மாவட்ட ஆயுதப் ப டை போலீஸ்காரரான இவர், ஆயு தப்படை கேண்டீனில் கேஷி யராக வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு வந்துள் ளார். பின்னர் அங்கிருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்
றுள்ளார். நாராயணபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த நெல் அறுவடை எந்தி ரத்திரம் கோபியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம்
அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரு சமூகத்தினரிடையே தகராறால் நடவடிக்கை
- போலீசார் குவிப்பு
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள பாகவெளி கிராமத்தில் பாப்பாத்தி கண் ணியம்மன், திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில்களில் ஆண்டு தோறும் சித்திரை மாத திரு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நடத்துவதில் இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.
இதனால் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்கு மார், அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், வாலாஜா தாசில்தார் நடராஜ் ஆகி யோர் முன்னிலையில் கடந்த 6-ந் தேதி சமரச பேச்சு வார்த்தை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் இரு சமூகத்தினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வில்லை.
இதனால் இரு சமூகத்தின ரிடையே அமைதியான சூழல் ஏற்படும் வரை கிரா மத்தில் எந்த கோவில்களிலும் திருவிழா நடத்தக் கூடாது என தற்காலிக தடை விதிக் கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்காலிக தடை உத்தரவை நீக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. அதன்
மீது விசாரணை மேற்கொண் டதில் பாப்பாத்தி அம்மன் கோவில் சம்பந்தமாக ஒரே சமூகத்தில் வரவு செலவு பார்ப்பதில் கருத்து வேறு பாடு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இரு சமூகத்தினரி டையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக தடை உத்தரவு நீடிப்பதால் பாகவெளி கிராமத்தில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
வெளியிலி ருந்து வரும் ஆட்கள் ஊருக் குள்நுழை வதை தடுக்கபோலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
- பெற்றோர் புகாரின் பேரில் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள காவ னூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் என்கிற சக்திவேல் (வயது 24).
இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரிடம் நட்பாக பழகி தவறாக நடந்துள்ளதாகவும், இதனால் மாணவி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் அசோக் (20) என்ற வாலிபரும் மாணவியை வெளியில் அழைத்துச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீசில் நிலை யத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.
இதனை அடுத்து ராணிப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாஸ், அசோக் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி இறந்த துக்கத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரெண் டாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 36). கட்டிட தொழிலாளி.
இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த யுவராஜ் விஷத்தை குடித்து விட்டார்.
அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சோளிங்கர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் யுவராஜ் ஏற்கனேவே இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளார். தகவலறிந்த சோளிங்கர் இன்ஸ் பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மன் வீதி உலா நடந்தது
- மாலையில் தீமிதி விழா நடக்கிறது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் கிராமத்தில் உள்ள தருமராஜசமேத திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.
விழாவின் 19-வது நாளான நேற்று அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்தது. தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் தீமிதி திருவிழா நடக்கிறது.
- நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
- விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலக்கசடு மற்றும் கழிவு வேளாண்மை தேசிய கொள்கையின் அடிப்படையில் கழிவுகளை அகற்ற விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது, மலக்கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022-ம் ஆண்டின் சட்ட திருத்தத்தின் அடிப்படையில் கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பயன்படுத்தும் வாகனங்களை உரிமம் இன்றி இயக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே மேல்வி ஷாரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங் களுடன் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்று உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை மேல்விஷாரம் நகராட்சி ஆணையாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம்-சென்னை ரெயில் மார்க்கத்தில் மோசூர்- திருவாலங்காடு ரெயில் நிலை யத்திற்கு இடையே தண்டவாளம் அருகில் 70 வயது மதிக் கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட் டம், நெமிலியில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஆசிரியர் தின விழா, நெமிலி வட்டாரத்தில் இயக்கம் தொடங்கி 15-ம் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடை பெற்றது. நெமிலி வட்டார தலைவர் வையாபுரி தலைமை தாங்கினார். மாவட்ட பொரு ளாளர் முருகன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் குணசேகரன் கலந் துகொண்டு பேசுகையில், ஜாக்டோ-ஜியோ சார்பில் 4 கட்ட போராட்டங்கள் அறி விக்கப்பட்டிருந்தது.
முதல் கட்டமாக கோட்டையை நோக்கி முற்றுகை போராட் டம் நடத்ததிட்டமிட்டு இருந் தோம். ஆனால் சட்டமன்ற கூட்டத் தொடர் நடந்து வரு கிற காரணத்தினாலும், 3 அமைச்சர்களை கொண்ட குழு எங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி முதல்- அமைச்சருக்கு உங்கள் கோரிக்கையை தெரிவிப் போம் என்று கூறியதால் போராட்டத்தை கைவிட்டோம்.
அகவிலைப்படியை நிலுவையுடன் சேர்த்து வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார். இதில் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.






