என் மலர்
ராணிப்பேட்டை
- மத்திய அரசை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில், ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து, சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ வழிகாட்டுதல் படி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில், ராணிப்பேட்டை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, மோகனசுந்தரம், பிரகாஷ் ஆகியோர் வரவேற்று பேசினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல். அண்ணாதுரை, மாவட்ட துணை தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தனர்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நாகேஷ், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் பிரவீனா , மாவட்ட ஊடகத்துறை பிரவீன் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் அருண் மோகன்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாலச்சந்தர், மாணவர் காங்கிரஸ் தருண்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர்.
இதில் அரக்கோணம் நகர தலைவர் பார்த்தசாரதி, வட்டார தலைவர்கள் வாலாஜா. கணேசன், ஆற்காடு வீரப்பா, அரக்கோணம் வாசுதேவன், நமச்சிவாயம், காவேரிப்பாக்கம் செல்வம், மண்ணு ஆகியோர் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி கூறினார்
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேலூர் சரகடி.ஐ.ஜி.முத்துசாமி, ராணிப்பேட்டைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக் கள் மற்றும் திருப்தியின்மை காரணமாக மறு விசாரணைக்கு அழைக்கப்பட்ட 8 மனுக்கள் என மொத்தமாக 16 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி. தெரிவித்தார். கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை
- வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புல னாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ரத்தினகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரத்தினகிரி நவாப் நகர் மசூதி அருகில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அரிசி மூட்டைகளை அடிக்கி வைத்துக்கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.
உடனே போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், இம்ரான் (வயது 29) என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இம்ரானை கைது செய்தனர்.
- மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தகவல்
- போலீஸ் விசாரணை
ஆற்காடு:
விழுப்புரம் மாவட்டம் காட்டுசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் சவுந்தர்யா. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கல வையில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவருக்கு 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவியின் தந்தை விஜயகுமாருக்கு, விடுதி வார்டன் தொலைபேசி மூலம் தெரி வித்து, பெற்றோர் மாணவியுடன் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
அதன் பேரில் மாணவியுடன் பெற்றோர் தங்கி உள்ளனர். மாணவி மயக்க நிலையில் இருந்ததால் விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும், கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். தேர்வும் எழுதியிருக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் மாணவியை, அவரது தந்தை விஜயகுமார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மாணவி சவுந்தர்யா இறந்துவிட்டார்.
சளி அதிகமாக இருந்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கலவை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வாரிசு வேலை வழங்கிட வேண்டும்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவசங்கரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மாநில துணை பொது செயலாளர் பெருமாள் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும், இறந்த சாலை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும்,
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திட வேண்டும், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும்,
அரசு ஊழியர் ஓய்வு வயதை 58 ஆக குறைத்து காலி பணியிடங்களில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் தணிகாசலம் நன்றி கூறினார்.
- ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் நடப்பு ஏப்ரல் மாதத்திற்கான, மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை 21-ந்தேதி காலை 11 மணிக்கு (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடைத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை கலைந்திட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்கள் பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே ஈராளம்சேரி கிராமத்தில் சென்னையை சேர்ந்த தாட்சாயினி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கம்பெனி இயங்கிவருகிறது.
இதில் 50-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலை செய்துவருகின்றனர். நேற்று மாலை கம் பெனி வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு களில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அரக்கோ ணம், ராணிப்பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை வரவ ழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத் துக்கான காரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அலட்சியமாக இருந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த பாலவாய் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). கூலி வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று காலை 11 மணியளவில் அந்த பகுதியில் விறகு வெட் டுவதற்கு சென்றுள்ளார். அப்போது மணிகண்டனை சாரை பாம்பு கடித்துள்ளது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் வாயில் இருந்து நுரை வருவதை கண்ட வீட்டில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை
- பொதுமக்கள் புகார்
நெமிலி:
நெமிலி சந்தைமேடு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட பொதுமக்கள் வீட்டில் தூங்க முடியாமல் இரவு முழுவதும் வீதிகளிலேயே தங்கியிருந்தனர்.
இந்த பிரச்சினை சுமார் 8 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறு கின்றனர். இப்பகுதியில்தான் தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. மின்தடை குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- தடுப்புகள் அமைக்க வேண்டும்
- ெபாதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
பனப்பாக்கம் பேரூராட்சி, அண்ணா நகரில் வசித்து வருபவர் வேலு (வயது 30). இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று அண்ணா நகரில் உள்ள கழிவு நீர் கால்வாயில் தவறிவிழுந் துவிட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்பு பொக்லைன் எந்திரம் வரவழைக்கபட்டு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கழிவுநீர் கால்வாயின் ஒரு பக்கத்தை உடைத்து பசுவை மீட்டனர். பசுவை மீட்கும் போது அதன் ஒரு கொம்பு உடைந்ததால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் ஓரங்களில் சிறிய தடுப்புகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் மணவூர் மருதவல்லிபுரம் பகுதியை சேர்ந்த வர் ரகுபதி (வயது 39). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று காலை மணவூர் - செஞ்சி பனப்பாக் கம் ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தை கடந்த போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற புறந கர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ரகுப தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மண் எடுக்க அனுமதி கோரப்பட்ட நிலையில் நடவடிக்கை
- விரைவு சாலை பணி நடைபெற்று வருகிறது
நெமிலி:
நெமிலி அருகே சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக அருகில் உள்ள ஏரிகளில் இருந்து மண் எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கர்ணாவூர், பெருவளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள சரப் பந்தாங்கல் ஏரி, கர்ணாவூர் ஏரி, ஜம்பேரி, ஆலந்தாங்கல் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து மண் எடுக்க அனுமதி கோரப்பட்டது.
இதைதொடர்ந்து நேற்று சென்னை - பெங்களூரு விரைவு சாலை அமைக்கும் பணிக்காக ஏரியிலிருந்து மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியது தொடர்பாக உதவி கலெக்டர் பாத்திமா நேரடி ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






