என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- வாரிசு வேலை வழங்கிட வேண்டும்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவசங்கரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மாநில துணை பொது செயலாளர் பெருமாள் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும், இறந்த சாலை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும்,
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திட வேண்டும், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும்,
அரசு ஊழியர் ஓய்வு வயதை 58 ஆக குறைத்து காலி பணியிடங்களில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் தணிகாசலம் நன்றி கூறினார்.