என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student died suddenly"

    • மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தகவல்
    • போலீஸ் விசாரணை

    ஆற்காடு:

    விழுப்புரம் மாவட்டம் காட்டுசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் சவுந்தர்யா. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கல வையில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    அவருக்கு 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவியின் தந்தை விஜயகுமாருக்கு, விடுதி வார்டன் தொலைபேசி மூலம் தெரி வித்து, பெற்றோர் மாணவியுடன் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    அதன் பேரில் மாணவியுடன் பெற்றோர் தங்கி உள்ளனர். மாணவி மயக்க நிலையில் இருந்ததால் விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும், கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். தேர்வும் எழுதியிருக்கிறார்.

    இந்த நிலையில் மீண்டும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் மாணவியை, அவரது தந்தை விஜயகுமார் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மாணவி சவுந்தர்யா இறந்துவிட்டார்.

    சளி அதிகமாக இருந்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கலவை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×