என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
- வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புல னாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ரத்தினகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரத்தினகிரி நவாப் நகர் மசூதி அருகில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அரிசி மூட்டைகளை அடிக்கி வைத்துக்கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.
உடனே போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், இம்ரான் (வயது 29) என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, வாலாஜா நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இம்ரானை கைது செய்தனர்.