என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் விபத்து"
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மோசூர் ரெயில் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் (வயது 73) என்பவர் தண்டவாளத்தை கடந்த போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு சென்று ராதாகிருஷ்ண னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் மணவூர் மருதவல்லிபுரம் பகுதியை சேர்ந்த வர் ரகுபதி (வயது 39). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று காலை மணவூர் - செஞ்சி பனப்பாக் கம் ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தை கடந்த போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற புறந கர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ரகுப தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வின்சென்டின் திருமணம் கிறிஸ்தவ ஆலயத்தில் வருகிற 17-ந்தேதி நடக்க இருந்தது.
- பெற்றோர் உடல் நலம் பாதித்தவர்கள் என்பதால், உறவினர்களுக்கு திருமண பத்திரிகைகளை, வின்சென்ட் நேரில் சென்று கொடுத்து வந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த சிரில்-புஷ்பத்தா தம்பதியரின் மகன் வின்சென்ட் சிரில்(வயது36). மீனவரான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது திருமணம் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வருகிற 17-ந்தேதி நடக்க இருந்தது.
வின்சென்டின் பெற்றோர் உடல் நலம் பாதித்தவர்கள் என்பதால், உறவினர்களுக்கு திருமண பத்திரிகைகளை, அவரே நேரில் சென்று கொடுத்து வந்தார். அதன்படி கொல்லத்துக்கு சென்றிருந்தார். அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த எர்நாடு எக்ஸ்பிரஸ், வின்சென்ட் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமணம் நடக்க சில நாட்களே உள்ள நிலையில், வின்சென்ட் ரெயில் மோதி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
குடியாத்தம் அடுத்த மேல்பட்டி வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதே போல லத்தேரி காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது உடையவர் தண்டவாளத்தை கடக்கும் போது காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






