என் மலர்
ராணிப்பேட்டை
- நண்பன் படுகாயம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கவரை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மகன் ஹேமச்சந்திரன் (வயது 9), அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவனது நண்பரான பிர சன்னாவுடன் (II) சைக்கிளில் காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் செல்லும் போது, எதிரே வந்த சரக்கு வேன் திடீரென அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் ஹேமச்சந்திரனை பாணாவரம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
மேலும் பிரசன்னா வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்ப வம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
- அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் ரெட்டிவலம், சிறுணமல்லி, சயனபுரம், கீழ்வீதி, பனப் பாக்கம், திருமால்பூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
நெமிலியை அடுத்த சயனபுரம் கிரா மம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43), விவசாயி. நேற்று முன்தினம் மாலை தனது இவர் நிலத்தில் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவித மாக மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தேர்வு முடிந்து மாலை மாணவர்கள் அனைவரும் தங்கும் இடத்திற்கு சென்றனர்.
- ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ்நிறுத்தம், ெரயில் நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை,காரை கூட்ரோடு பகுதியில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் இயங்கி வருகிறது.
இந்த இல்லத்தில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. மேலும் 9, 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வெளியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து இல்லத்தில் தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் 10, 11,12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்து 15 பேர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 47 பேர் உள்ளனர். தற்போது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு தேர்வு நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் தேர்வு முடிந்து மாலை மாணவர்கள் அனைவரும் தங்கும் இடத்திற்கு சென்றனர்.
மாலை ராணிப்பேட்டை பகுதியில் லேசான மழை தூரல் வர தொடங்கியது. அப்போது இல்லத்தில் இருந்த சூர்யா என்கிற காட்டுராஜா (வயது10), பூபதி (12), சூர்யா (13), தினேஷ் (10) ஆகிய 4 மாணவர்கள் தாங்கள் வெளியில் காய்ந்திருக்கும் துணிகளை எடுத்து வருகிறோம் என கூறி சென்ற மாணவர்கள் 4 பேரும் இல்லத்திற்குள் திரும்பி வரவில்லை.
இதில் சூர்யா(எ)காட்டுராஜா(10) மற்றும் சூர்யா(13) ஆகிய இருவரும் அண்ணன், தம்பி ஆவார். இந்த நிலையில் காணாமல் போன மாணவர்களை இல்லத்தின் ஊழியர்கள் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ்நிறுத்தம், ெரயில் நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இச்சம்பவம் குறித்து சிறுவர்களுக்கான குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன்ராதா நேற்று ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும் அரசினர் இல்லத்திலிருந்து தப்பி ஓடிய மாணவர்களை ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.
- அஜித் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனின் தலையில் வெட்டினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜித் மற்றும் சரண் ஆகியோரை தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது48) இவர் சிப்காட் பேஸ்-3 பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இவரது 2 மகள்கள் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் சுந்தரேசனின் மகள்கள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது லாலாப்பேட்டையை சேர்ந்த அஜித் (22) மற்றும் சரண் ஆகிய இருவரும் கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து மாணவிகள் தனது பெற்றோரிடம் கூறினர். மாணவிகளின் தந்தை சுந்தரேசன், அஜித் மற்றும் சரணிடம் இதுபற்றி தட்டி கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த இருவரும் சுந்தரேசனை தாக்கினர். அஜித் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனின் தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரேசன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுந்தரேசன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜித் மற்றும் சரண் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- என்ஜின் மட்டும் வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது
- பயணிகள் போக்குவரத்து ரெயிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே மகேந்திரவாடி ரெயில் நிலையம் உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு சென்னை யில் இருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது. பின்பு என்ஜின் மட்டும் அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை என்ஜின் வரவழைக்கப் பட்டு சரக்கு ரெயிலோடு இணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு தண்டவாளத்தில் தடம்புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரத்தை வரவழைக்க ஜோலார்பேட்டை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிரதான லைனில் இல்லாமல் லூப்லைனில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பயணிகள் போக்குவரத்து ரெயிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரக்கோணம் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா பள்ளிவாசல் திடலில் நடத்தப்பட்டது.
- ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, மேல்விஷாரம் மசூதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர். ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதியில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
அரக்கோணம் சுவால்பேட்டையில் ஜாமியா மஸ்ஜித் ஈக்கா பள்ளிவாசல் திடலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலைமை அஸ்ரத் ஹாஜி.கமாலுதீன் தலைமையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா பள்ளிவாசல் திடலில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
- குறை தீர்வு கூட்டங்கள் மாதத்தில் முதல் வாரத்தில் வட்ட அளவிலும், 2-வது வாரம் கோட்ட அளவிலும், 3-வது வாரம் மாவட்ட அளவிலும் நடைபெறும்
- பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் வடமலை உள்பட அதிகாரிகள் பலர் முன்னிலை முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ,விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் குறித்த நேரத்தில் நடத்த வேண்டும்,நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறது,நெல் பயிர் செய்யாத, விவசாயி அல்லாதவர்கள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை பட்டியல் இருப்பது போன்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அந்தந்த பகுதி விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து தான் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
குறை தீர்வு கூட்டங்கள் மாதத்தில் முதல் வாரத்தில் வட்ட அளவிலும், இரண்டாவது வாரம் கோட்ட அளவிலும், மூன்றாவது வாரம் மாவட்ட அளவிலும் நடைபெறும், விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் இருந்தால் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மண் ஏற்றி செல்வதை பார்த்த அவர் லாரியை நிறுத்தி விசாரணை
- அனுமதி வழங்கப்படாத இடத்திற்கு ஏரி மண்ணை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆற்காடு:
ஆற்காடு வட்டம், சாத்தூர் கிராமத்தில் கிராம ஊராட்சி செயலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை ராணிப் பேட்டை உதவி கலெக்டர் வினோத்கு மார் ஆய்வு செய்தார்.
பின்னர் வரும் வழியில் 2 லாரிகள் மண் ஏற்றி செல்வதை பார்த்த அவர் லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் ஆற்காடு வட்டம் விளாரி கிராமத்தில் ஏரியில் அரசு அனுமதி பெற்று மண் எடுக்கப்பட்டு வருகின்றது, ஆனால் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு மண்ணை கொண்டு செல்லாமல் அனுமதி வழங்கப்படாத இடத்திற்கு ஏரி மண்ணை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கிருந்த 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரிகள் ஆற்காடு தாசில்தார் வசந்தி மேற்பார்வையில் திமிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் 5 லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது.
- விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்
- வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரிவித்தார்
சோளிங்கர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மான கழகம் சார் பில் வருவாய் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கூட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சோளிங்கர் செயற்பொறியா ளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி செயற் பொறியாளர் உமாசந்திரா முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் சங்கர் வரவேற்றார்.
வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு வருவாய் மேம்ப டுத்துதல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பல் வேறு ஆலோசனை வழங்கினார்.
மேலும் பணியின் போது தேவையான உபகர ணங்கள் வைத்திருத்தல், விபத்து ஏற்படாமல் கவனுத் துடன் பணியாற்றுதல் உள் ளிட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.
உதவி பொறியாளர்கள், மதிப்பீட்டு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், வருவாய் மேற்பார்வையாளர்கள், கணக்கீட்டு கண்காணிப்பா ளர்கள், கணக்கீட்டாளர்கள் மற்றும் கோட்ட கண்காணிப் பாளர்கள் கலந்து கொண்ட னர்.
முன்னதாக சோளிங்கர் மின் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு குறைகளை கேட்ட றிந்தார். வாடிக்கையாளர்கள் தெரிவித்த குறைகளை தீர்வு காணப்படும் என தெரி வித்தார்.
- ஆற்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு அல்லா ளச்சேரி பகுதியைச் சேர்ந்த வர் பூவரசன் (வயது 20). இவ ரது நண்பர் கலவை அடுத்த வேம்பி பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் (28). இவர்கள் சோளிங்கரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ராஜ்கிரண், பூவரசன் ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் ஆற் காடு நோக்கி வந்துள்ளனர். கீராம்பாடி அருகே வந்த போது எதிரே வந்த கார் ராஜ் கிரண் ஓட்டி வந்த மோட் டார்சைக்கிள் மீது மோதியுள் ளது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பூவரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகா யம் அடைந்த ராஜ்கிரண் ஆற்காடு அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு முத லுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய திரு வண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச்சேர்ந்த கார் டிரைவர் சாமிநாதன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவியை தந்தை ஆத்திரம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா சீக்கரஜ புரம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 46). ஆற்காடு மாசா பேட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகவேலை செய்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கணபதி என்பவரது 9 வயது மகள் நகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் அன்று கலர் உடையில் பள்ளிக்கு வந்துள்ளாள்.
ஆசிரியர் நித்தியானந்தம் ஏன் கலர் உடையில் வந்தாய் என கேட்டுள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு மாணவியின் தந்தை கணபதி நேற்று பள்ளிக்கு வந்த ஆசி ரியர் நித்தியானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் கையில் வைத்திருந்த பிளேடை காட்டி ஒழித்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த ஆசிரியர் ஆற்காடு அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஆசிரியர் நித்தியானந்தம் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக் குப் பதிவு செய்து மாணவியின் தந்தை கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிறரை காப்பாற்றுவது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு சிறப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான பாண்டியன் மற்றும் வீரர்கள் பொதுமக்களுக்கும், தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அரக்கோணத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று வீரர்கள் பாதுகாப்பாக பணி செய்வது, பணியின் போது விபத்து ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது, பிறரை காப்பாற்றுவது குறித்த செயல் விளக்கம் தொழிலாளர்களிடையே செய்து காண்பித்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர் கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






