என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Description of fire prevention action"

    • பிறரை காப்பாற்றுவது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு சிறப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான பாண்டியன் மற்றும் வீரர்கள் பொதுமக்களுக்கும், தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக அரக்கோணத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று வீரர்கள் பாதுகாப்பாக பணி செய்வது, பணியின் போது விபத்து ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது, பிறரை காப்பாற்றுவது குறித்த செயல் விளக்கம் தொழிலாளர்களிடையே செய்து காண்பித்தனர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர் கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×