என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவன ஊழியர் சாவு"

    • ஆற்காடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு அல்லா ளச்சேரி பகுதியைச் சேர்ந்த வர் பூவரசன் (வயது 20). இவ ரது நண்பர் கலவை அடுத்த வேம்பி பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் (28). இவர்கள் சோளிங்கரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ராஜ்கிரண், பூவரசன் ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் ஆற் காடு நோக்கி வந்துள்ளனர். கீராம்பாடி அருகே வந்த போது எதிரே வந்த கார் ராஜ் கிரண் ஓட்டி வந்த மோட் டார்சைக்கிள் மீது மோதியுள் ளது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பூவரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகா யம் அடைந்த ராஜ்கிரண் ஆற்காடு அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு முத லுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய திரு வண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச்சேர்ந்த கார் டிரைவர் சாமிநாதன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது அங்குள்ள ஒரு மின்மோட்டாரை ஆன் செய்ய முயன்றார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் தாக்கியது.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்டம் மேட்டூர் லக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 29). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி கொண்டப்பநாயன அள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது அங்குள்ள ஒரு மின்மோட்டாரை ஆன் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த குருபரபள்ளி போலீசாருக்கு உடனே அங்கு வந்து சதீஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×