என் மலர்
ராணிப்பேட்டை
- சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் தேர் திருவிழா முன்னிட்டு நடவடிக்கை
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தோசித பெரு மாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை மாலை நேரங்களில் நான்கு மாட வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்தநிலையில் சுவாமி வீதிஉலா செல்வதற்கு ஏதுவாக பஜார் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
நகராட் சியின் நகரமைப்பு ஆய்வாளர் கவிதா, துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மேற்பார்வையில் வருவாய்த்துறை உதவி யுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் நடராஜன் உடனிருந்தனர்.
- தீய ணைப்பு வீரர்கள் மீட்டனர்
- காப்புக் காட்டில் விட்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கேசவன்குப்பம் கிராமத்தில் 30 அடி ஆழ விவசாயக்கிணற்றில் புள்ளிமான் விழுந்து கிடந்தது.
இது குறித்து வனச் சரகர் துரைமுருகன் சோளிங்கர் தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சிவகுமார் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் சம்மந்தப் பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 30 அடி ஆழ முள்ள கிணற்றில் இருந்து அரை மணிநேரம் போராட் டத்திற்கு பிறகு 2 வயது மதிக் கத்தக்க ஆண் புள்ளிமானை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த புள்ளிமானை வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர்.
- ஊக்கத்தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது
- ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்கள் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சொத்துவரி கட்டினால் ஊக்கத்தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் வசிப்பவர்கள் 2023-24-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரியினை வருகிற 30-ந் தேதிக்குள் பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெறலாம் என்ற விவரங் கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை காவேரிப்பாக்கத்தில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
இதில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
- ஆக்கிரமிப்பு அகற்றியதால் ஆத்திரம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
அரக்கோணம்:
அரக்கோணம் கிருஷ்ணா பேட்டை பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது.
அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது லலிதா என்பவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டை பொக்லைன் எந்திரம் வரவழைத்து அதிகாரிகள் மூலம் அகற்றப்படுவது லலிதாவுக்கு தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திடீரென வீட்டின் அருகில் இருந்த மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
அங்கிருந்த பெண் காவலர்கள் அவரை பிடித்து இழுத்து கீழே இறக்கினர். அப்போது லலிதா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பொது மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாற்று இடம் வழங்கி பின்னர் ஆக்கிரமித்து அகற்றக் கோரி விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலர் கவுதம் மற்றும் ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் ஐசக் ஐயா ஆகியோர் கூறினர்.
இதனால் ஆக்கிரமிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டு இரவு என்று பாராமல் தொடர்ந்து வீடுகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- மருத்துவம் படிக்காமலேயே அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக புகார்
- ெஜயிலில் அடைப்பு
சோளிங்கர்:
சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர், மருத்துவம் படிக்காமலேயே, பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சோளிங்கர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கருணாகரன் மற்றும் மருந்தாளர் சேகர் மற்றும் வருவாய் அலுவலர்கள் புகார் தெரிவிக்கப்பட்ட முருகன் வீட்டில் சென்று நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, விசாரணையில் அவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் மருத்துவர் எனக்கூறி, பொதுமக்களுக்கு காய்ச்சல், சர்க்கரை உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஊசிகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
- 4 தனிப்படைகள் அமைத்து தேடினர்
- குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில், காரை கூட்ரோடு அருகே தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ்இயங்கி வரும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த இல்லத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், சிறுவர்கள், குழந்தைகள் நல குழு மூலம் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த இல்லத்தில் 47 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை 4 மாணவர்கள், மழை தூரல் போட்ட போது காய்ந்திருக்கும் துணிகளை எடுத்து வருவதாக கூறி வெளியே சென்றவர்கள் இல்லத்திற்குள் திரும்ப வரவில்லை.
இது குறித்து குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன்ராதா ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இல்லத்திலிருந்து தப்பி ஓடிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மாணவர்களை விரைந்து மீட்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் ஆற்காடு இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி, ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காண்டீபன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய மாணவர்களை மீட்க ஆரணி, போளூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் தேடி வந்தனர்.
நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா புலவன்பாடி பகுதியில் இருந்த படவேடு கோவில் அருகே இருந்த ஒரு மாணவன் என நான்கு மாணவர்களையும் மீட்டு போலீசார் ராணிப்பேட்டை அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன்ராதாவிடம் ஒப்படைத்தனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் செயற்கை கைகள் என மொத்தம் ரூ.10 லட்சத்து 72 ஆயிரத்து 350 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் 17 மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில் சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் வேண்டி மனு அளித்தவர்களுக்கு உடனடியாக சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் ஆகியவற்றையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
பின்னர் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு மனுக்களை பெற்று கொண்டனர்.
மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பணியின் போது உயிரிழந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த 5 கிராம நிர்வாக அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிவதற்கான பணி நியமன ஆணைகளையும், தாட்கோ மூலம் 5 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர் நல வாரிய அட்டைகளையும் அமைச்சர் காந்தி வழங்கினார்.
- ரூ.7.43 லட்ச மதிப்பில் கட்டப்படுகிறது
- பூமி பூஜை போடப்பட்டது
சோளிங்கர்:
சோளிங்கர் ஒன்றியம் வாங்கூர் ஊராட்சியில் எடையந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் புதிய சமையலறை ரூ.7.43 லட்ச மதிப்பில் கட்டும் பணிக்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.
வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார் சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதிவாணன் கரடிகுப்பம் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கனகராஜ் சமூக சேவகர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ரமேஷ் கோதண்டராமன் பிரபு மற்றும் இடையதாங்கல் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
- ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாட்டிக்குளம், பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து.
கழிவுநீர் கால்வாய் உயர்த்தி தளம் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகர தலைவர் கோபால் தலைமை தாங்கினார்.காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கல்பணா, நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி துணை தலைவர் பழனி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏ.எம். முனிரத்தின எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கழிவுநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
அப்போது தரமான கட்டுமான பொருட்கள் கொண்டு பணி செய்ய வேண்டும்.பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திருத்தணி சாலையில் உள்ள திருவள்ளூர் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து. ரூ.3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நகராட்சி வார்டு உறுப்பினர் மோகனா சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.அப்போது காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் ராஜா, காங்கிரஸ் பட்டறை மணி, ஒப்பந்ததாரர் தயாநிதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
- வருகிற 26-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான இரண்டாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவரது குடும்பத்தைச் சார்ந்தோர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.
இந்த குறைதீர்க்கும் முகாமில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- வனத்துறையினர் விசாரனை
- மான்களின் உடல் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் எரியூட்டப்படும்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் நேற்று 3 மான்கள் வந்தன.
அரக்கோணம்- திருத்தணி ெரயில் பாதையை கடந்த போது அரக்கோணம் ெரயில்வே போலீசார் மற்றும் அரக்கோணம் ெரயில்வே பாதுகாப்பு படையினர் இறந்த மான்களை கைப்பற்றி ஆற்காடு வனத்துறையினருக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மான்களின் உடல் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் எரியூட்டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பழங்கள் எரிந்த சாம்பலானது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே கண்ணடிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45).
சென்னை- பெங்களூர் சாலையில் தனது குடிசை வீட்டில் பழக்கடை வைத்து விற்பனை செய்தார். நேற்று இரவு குடிசை வீட்டில் தீ விபத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் பழங்கள் தீயில் எரிந்த சாம்பலானது.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






