என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescue the mysterious 4 students"

    • 4 தனிப்படைகள் அமைத்து தேடினர்
    • குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில், காரை கூட்ரோடு அருகே தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ்இயங்கி வரும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது.

    இந்த இல்லத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், சிறுவர்கள், குழந்தைகள் நல குழு மூலம் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த இல்லத்தில் 47 பேர் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை 4 மாணவர்கள், மழை தூரல் போட்ட போது காய்ந்திருக்கும் துணிகளை எடுத்து வருவதாக கூறி வெளியே சென்றவர்கள் இல்லத்திற்குள் திரும்ப வரவில்லை.

    இது குறித்து குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன்ராதா ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இல்லத்திலிருந்து தப்பி ஓடிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் மாணவர்களை விரைந்து மீட்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் ஆற்காடு இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி, ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காண்டீபன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய மாணவர்களை மீட்க ஆரணி, போளூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் தேடி வந்தனர்.

    நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா புலவன்பாடி பகுதியில் இருந்த படவேடு கோவில் அருகே இருந்த ஒரு மாணவன் என நான்கு மாணவர்களையும் மீட்டு போலீசார் ராணிப்பேட்டை அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன்ராதாவிடம் ஒப்படைத்தனர்.

    ×