என் மலர்
நீங்கள் தேடியது "A house fire"
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
- மின்கசிவு காரணமா? போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் குட்டகொல்லி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பீமராஜன். இவரது மகன் மணி (வயது 48). விவசாயம் செய்து வருகிறார்.
இவரது குடிசை வீட்டில் நேற்று மாலை7 மணியளவில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடிவிட்டனர்.
இதுகுறித்து உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த துணிகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது.இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பழங்கள் எரிந்த சாம்பலானது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே கண்ணடிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45).
சென்னை- பெங்களூர் சாலையில் தனது குடிசை வீட்டில் பழக்கடை வைத்து விற்பனை செய்தார். நேற்று இரவு குடிசை வீட்டில் தீ விபத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் பழங்கள் தீயில் எரிந்த சாம்பலானது.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






