என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • செல்போனில் படம் எடுத்து மிரட்டல்
    • போக்சோவில் கைது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அருகே உள்ள கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் முனாப் (23) வேன் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி இறந்து விட்டார்.

    இந்த நிலையில் அப்துல் முனாப் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியுடன் நெருக்கமாக இருப்பது போல் செல்போனில் படம் எடுத்து வைத்து கொண்டு, தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தொந்தரவு செய்து வந்ததாகவும்,

    மேலும் ஊர் முழுவதும் மாணவியை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வேறு யாரையும் திருமணம் செய்ய விடமாட்டேன் என கூறி வந்ததாகவும் தெரிகிறது.

    இதனையடுத்து மாணவியின் தந்தை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அப்துல் முனாப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அம்மூர் முதல் நிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது
    • கூட்டத்தில் பேரூராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல் நிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று பேரூராட்சிமன்ற தலைவர் சங்கீதா மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் கோபிநாதன், பேரூராட்சிமன்ற துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அம்மூர் முதல் நிலை பேரூராட்சியில் நீர் பிடிப்பு மற்றும் ஓடை புறம்போக்கு தவிர அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அடிமனை நீங்கலாக மேற்கூரைக்கு மட்டும் வரி விதிப்பு செய்வது,நடப்பு 2023-24ம் ஆண்டில் செயல்படுத்துவதற்கு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், மூலதன மான்யம், இயக்ககம் மற்றும் பாராமரிப்பு, இடைவெளி நிரப்பும் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நபார்டு திட்டத்தில் பணிகள் தேர்வு செய்வது, அம்மூர் பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் 451 மின் விளக்குகளைரூ.26.77 லட்சம் மதிப்பீட்டில்

    எல்.இ.டி போன்ற ஆற்றல் மிகு விளக்குகளாக மாற்றம் செய்யும் பணியினை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபாவிற்கு பூஜைகள் நடத்தது
    • பக்தர்கள் தரிசனம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் உள்ளது.தற்போது இந்த கோவில் அருகில் புதியதாக சீரடி சாய்பாபாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

    நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கலசங்கள் புறப்பாடும், மூலவர் சாய்பாபாவிற்கும் , கோபுர விமானத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபாவிற்கு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ஆய்வு
    • ஊரக வளர்ச்சி துறை‌ அதிகாரிகள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தில் உள்ள முகுந்தராயபுரம் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், லாலாப்பேட்டை ஊராட்சியில் புதிய கட்டிடம், மருதம்பாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட பணி ஆகியவற்றையும், பள்ளேரி, கொண்டகுப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நிலுவையில் இருந்து வருவதையும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரடியாக பார்வையிட்டு பணிகள் தொடங்காமல் உள்ளது குறித்து கேட்டறிந்து வருகிற மே 10-ந் தேதிக்குள் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கல்புதூர் ஊராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை அடுத்த 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    கல்மேல்குப்பம் ஊராட்சியில் ரூ.30.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டடப் பணிகள் அடுத்து இரண்டு வாரத்திற்குள் முடிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாணாபாடி ஊராட்சியில் ரூ.11.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் செட்டித்தாங்கல் ஊராட்சியில் 2 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிட பணிகளையும், வன்னிவேடு ஊராட்சியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.

    இப்பணிகள் அனைத்தையும் கண்காணித்து விரைவாகவும் தரமாகவும் நடைபெறுவது உறுதி செய்திட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஒன்றிய பொறியாளர் முனுசாமி உள்பட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • நீராவி ரெயில் என்ஜின் வடிவமைப்பில் மின்சார ரெயில்
    • பழமையான நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்

    அரக்கோணம்:

    ஆவடியில் இருந்து நீராவி ரெயில் என்ஜின் போன்று வடிவமைக் கப்பட்ட மின்சார ரெயில் 4 ஏ.சி. பெட்டிகளுடன் சோதனை ஒட்டமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    இது குறித்து ரெயில்வே அலுவலர்கள் தெரிவித்த போது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த நீராவி ரெயில் என்ஜின் பெட்டிகளின் முன் புறம் மற்றும் பின்புறமும் இருக்கும்படி அமைக் கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் சோதனை ஓட்டமாக ஆவடியில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்பட்டது என்றனர்.

    நீராவி ரெயிலை பார்த்த பயணிகள் ஆரம்ப காலத்தில் பயணித்த பழமையான நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

    • உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய போது பரிதாபம்
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. அவரது மனைவி வசந்தா (வயது 55).

    இவர், சம்பவத்தன்று தக்கோலம் அருகே உள்ள மாரிமங்கலம் கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    பின்னர், வசந்தா வீட்டிற்கு வருவதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    கடம்பநல்லூர் -பரமேஸ்வரமங்களம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது திடீரென் மோட்டார் சைக்கிளில் இருந்து வசந்தா கீழே விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

    • மின்கம்பி உரசியதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந் திரன் (வயது 60). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவ ரின் நிலத்தில் இருந்து டிராக்டர் மூலம் வைக்கோலை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பி உரசியதால் வைக்கோல் தீடீரென தீப்பிடித்து எரியத்தொ டங்கி, சில நிமிடங்களில் வைக்கோல் முழுவதும் எரிந்து நாச மானது. அப்போது எரிந்து கொண்டிருந்த ஒரு கட்டு வைக் கோல் ராஜேந்திரன் மீது விழுந்து தீக்காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த னர்.

    தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக் கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    மேலும் தீவிபத்து குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டிக்கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஸ்ரீ தருமராஜா கோவில் ஸ்ரீ கிருஷ்ண பாண்டவ சமேத திரவுபதி அம்மன் கோவிலில் 94 -ம் ஆண்டு மகாபாரத பிரசங்கம் மற்றும் அக்னி வசந்த தீ மிதி திருவிழா முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழா இன்று தொடங்கி 18-ந் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது.

    இன்று காலை கொடி மரத்திற்கு மாலையணிவிக்கப்பட்டு மாவிலை தென்னை ஒலையால் தோரணம் அமைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டு மங்கல வாத்தியங்கள் தாரை தம்பட்டங்கள் முழங்க மகாபாரத கொடி கருடன், ஆஞ்சநேயர் படத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து தீமிதிக்க மஞ்சள் கயிறு கொண்டு காப்பு கட்டிக்கொண்டனர்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு
    • கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வருகிற மே 1-ந் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டிற்கான கிராம சபைக்கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் தவறாமல் நடத்தப்பட வேண்டும்.

    இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (2023-2024), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புத் திட்டம் மற்றும் இதர பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கிராம சபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார்.மாநில இணை செயலாளர் அமிர்தவள்ளி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம் வட்டார நிர்வாகிகள், உள்பட அங்கன்வாடிகள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 27-ந் தேதி அன்று பேரூராட்சிமன்ற சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது
    • டெண்டர்களை ரத்து செய்து மறு டெண்டர் நடத்த வேண்டும் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக அ.தி.மு.க மற்றும் பா.ம.க வை சேர்ந்த கவுன்சிலர்கள் 6 பேர் நேற்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்மூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 6 தி.மு.க கவுன்சிலர், 6 அ.தி.மு.க கவுன்சிலர், 2 பா.ம.க கவுன்சிலர்கள், ஒரு சுயேட்சை என 15 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் 3வது வார்டு கவுன்சிலர் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்ததால் அந்த வார்டு காலியாக உள்ளது.

    இந்த நிலையில் அம்மூர் பேரூராட்சியில் இருந்து கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அஜெண்டாவில் வருகிற 27-ந் தேதி அன்று பேரூராட்சிமன்ற சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது என அஜெண்டாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அஜெண்டாவில் வரவு செலவு கணக்கு மற்றும் டெண்டர்கள் குறித்து வெளிப்படை தன்மை இல்லாததால் அனைத்து டெண்டரையும் ரத்து செய்து மறு டெண்டர் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அ.தி.மு.க மற்றும் பா.ம.க கவுன்சிலர்கள் நேற்று மாலை தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மறு டெண்டரை நடத்தி வீடியோ பதிவுகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பேரூராட்சி அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்த வர் பாபு. இவரது பசு மாடு வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.

    அங்கு மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. மேய்ந்து கொ ண்டிருந்த பசுமாடு எதிர்பாராத விதமாக மின் கம்பியில் சிக்கிக்கொண்டது.

    அதில் கசிந்த மின்சாரம் பாய்ந்த தில் பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    பின்னர் பசுமாட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×