என் மலர்
ராணிப்பேட்டை
- 2 பேர் கைது
- சென்னைக்கு கடத்தி சென்றனர்
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவை இருந்தது. குட்கா 55 மூட்டை, பான் மசாலா 50 கூல் லீப் 65 மூட்டைகள், மற்றும் புகையிலை போன்றவற்றை கடத்தி வந்தது தெரிய வந்தது . இதன் எடை சுமார் 1டன் ரூ. 5
லட்சம் மதிப்பாகும்.
இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 52), திமிரி அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (27) ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஆகியவை சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 210 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 210 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ராணிப்பேட்டை விஷ்வாஸ் பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் அசோக், வடிவேலு, நிர்மலா செளந்தர், நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன்,தேவி பென்ஸ் பாண்டியன், அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 3 மாதத்துக்கு பின் கைது
- மாற்றுச்சாவி மூலம் துணிகரம்
வாலாஜா:
வாலாஜாவில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிந்து கோஷ் (வயது 41). இவர் மலேசியாவில் 15 வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார்.இவரின் தந்தை கணேசன் குடும்பத்தினருடன் வாலாஜாவில் வசித்து வருகிறார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணேசன் வீட்டில் இருந்த பீரோ சாவி தொலைந்து விட்டது. மாற்று சாவியை போட்டு திறக்க முயற்சி செய்தார். இதற்காக தனது வீட்டின் பக்கத்தில் வசிக்கும் பீரோ ரிப்பேர் கடையில் வேலை செய்யும் லோகேஸ்வரனை (32) அழைத்து பீரோவை திறக்க வைத்தார்.
அப்போது பீரோவின் உள் லாக்கரில் வைக்க ப்பட்டிருந்த 13 பவுன் நகைகளை கணேசனுக்கு தெரியாமல் லோகேஸ்வரன் திருடி உள்ளார்.
இந்த நிலையில் வாலாஜா வந்த பிந்து கோஷ், தான் ஏற்கனவே பிரோவில் வைத்து விட்டு சென்ற 13 பவுன் நகைகள் காணாமல் போனது குறித்து தந்தையிடம் விசாரித்தார்.
அப்போது சாவி தொலைந்து விட்டதால் மாற்றுச்சாவியை செய்யப்பட்டது. என கூறினார்.
இது குறித்து வாலாஜா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஸ்வரனை பிடித்து விசாரித்ததில் நகையை திருடியதாக அவர் ஒப்புகொண்டார்.
இதையடுத்து அவரிடம் இருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
- மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- 18 நபர்கள் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஒன்றிய,நகர,பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்.ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் வருகிற மே 12-ந் தேதியன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் , தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு கிளை மற்றும் வட்டங்களில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்,
வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று 18 நபர்கள் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூத்திற்கும் பூத் வாரியாக பெண்கள் குழு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அதில் நிர்வாகிகள் 9 பேர் செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர் மற்றும் உறுப்பினர்கள் என 25 நபர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபூதீன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் பூண்டி பிரகாஷ் உள்பட நகர , ஒன்றிய , பேரூர் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு
- 26 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார்.
நகரமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் துரை.சீனிவாசன் பேசுகையில்:-
தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தேவையான நிதிகளை மாநில அரசு ஒதுக்கி வருகிறது. ஆனால், அதிகாரிகளின் சரியான செயல்பாடு இல்லாததால் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை.
இதனால் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. சாலை போடும்போதும், கழிவுநீர் கால்வாய் கட்டும் போதும் அங்கு மின்கம்பங்கள், குடிநீர் பம்பு போன்றவைகளை சேர்த்து சாலைகள் போட்டு, கழிவுநீர் கால்வாய் கட்டி விடுகின்றனர்.
இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. 25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இன்னும் சாலை போடவில்லை. குடிநீர் வசதி ஏற்படுத்தவில்லை.
விரைந்து பணிகளை தொடங்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகத்திற்கு வர வேண்டி இருக்கும் என்றார்.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வருவதில்லை எனவும் வீடுகளின் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சரிவர சேகரிப்பதில்லை என கூறினர்கள்.
கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- வாகன தணிக்கையில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ரத்தினகிரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருசக் கரவாகன திருட்டை தடுக்க ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையினான போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆற்காட்டில் உள்ள கண் ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழி யாகமோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட் டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 41) என்பதும், இவர் ரத்தினகிரி பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திரு டியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- லைசென்சு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
- கலெக்டர்கள் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மாநில வாணிப கழகத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத் தும் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) மே தினத்தை முன்னிட்டு, மூடிவைக்க வேண்டும்.
மேலும் அன்றைய தினம் மதுக் கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் லைசென்சு தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் லைசென்சு ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மதுக்கூட உரிமைதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை கலெக்டர்கள் வளர்மதி, பாஸ்கர பாண் டியன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.
- கலெக்டர் தகவல்
- வருகிற 2-ந் தேதி நடக்கிறது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்அடிப்படையில் வருகிற 2-ந் தேதி அன்று ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணி ப்பேட்டையில் ஆற்காடு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் செயல்படும் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுப வர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது எனவும் கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 70). கூலித்தொழிலாளி.
கடந்த 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.
இந்தநிலையில் அனந்தலை மேல்புதுப்பேட்டை பசும் பொன் நகரில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குப்புராஜ் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
- பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை மற்றும் வருவாய் துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார். ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன். எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகர சபை தலைவர் சுஜாதா வினோத், மேல்விஷாரம் நகர சபை தலைவர் முகமது அமீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மொத்தம் 567 பயனாளி களுக்கு தாலிக்கு தங்கம், தையல் எந்திரம், இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை உள்பட மொத்தம்
ரூ.3 கோடியே 63 லட்சத்து 12 ஆயிரத்து 426 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் ஒன்றியக் குழுத் தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, அசோக்,வடிவேலு, நிர்மலா சவுந்தர், நகரசபை தலைவர்கள் ஹரிணி தில்லை, தமிழ்ச்செல்வி அசோகன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம் உள்பட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா நன்றி கூறினார்.
- போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரேணுகா மற்றும் குழந்தைகள் உடல்களை மீட்டனர்.
- ரேணுகாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேலபுலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). சென்னையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பேபி என்கிற ரேணுகா (30) தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
தம்பதியின் மகள் ஸ்ருதிஹா (5), மகன் தீபக் (3) இருவரும் அங்குள்ள அங்கன்வாடியில் படித்து வந்தனர். ரேணுகா தனது 2 குழந்தைகள் மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் ரேணுகா அங்கன்வாடியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை உடனே அங்கன்வாடிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ரேணுகா அவரது குழந்தைகளுடன் மதிய உணவை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார் என தெரிவித்தனர்.
இந்நிலையில் மேலபுலம் ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றில் ரேணுகா மற்றும் அவரது 2 குழந்தைகள் பிணமாக மிதந்தனர். அந்த வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரேணுகா மற்றும் குழந்தைகள் உடல்களை மீட்டனர். 3 பேர் உடல்களை ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக ரேணுகா 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
ரேணுகாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சங்கர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் வடமாம்பாக்கத்தை சேர்ந்தவர் துருகன் (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். துருகனுக்கு குடி பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் துருகன் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு வந்தபோது மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத போது துருகன் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






