என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A ton of Gutka seized"

    • 2 பேர் கைது
    • சென்னைக்கு கடத்தி சென்றனர்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவை இருந்தது. குட்கா 55 மூட்டை, பான் மசாலா 50 கூல் லீப் 65 மூட்டைகள், மற்றும் புகையிலை போன்றவற்றை கடத்தி வந்தது தெரிய வந்தது . இதன் எடை சுமார் 1டன் ரூ. 5

    லட்சம் மதிப்பாகும்.

    இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    அதனை கடத்தி வந்த ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 52), திமிரி அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (27) ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஆகியவை சென்னைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×