என் மலர்
நீங்கள் தேடியது "13 பவுன் நகை திருட்டு"
- 3 மாதத்துக்கு பின் கைது
- மாற்றுச்சாவி மூலம் துணிகரம்
வாலாஜா:
வாலாஜாவில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிந்து கோஷ் (வயது 41). இவர் மலேசியாவில் 15 வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார்.இவரின் தந்தை கணேசன் குடும்பத்தினருடன் வாலாஜாவில் வசித்து வருகிறார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணேசன் வீட்டில் இருந்த பீரோ சாவி தொலைந்து விட்டது. மாற்று சாவியை போட்டு திறக்க முயற்சி செய்தார். இதற்காக தனது வீட்டின் பக்கத்தில் வசிக்கும் பீரோ ரிப்பேர் கடையில் வேலை செய்யும் லோகேஸ்வரனை (32) அழைத்து பீரோவை திறக்க வைத்தார்.
அப்போது பீரோவின் உள் லாக்கரில் வைக்க ப்பட்டிருந்த 13 பவுன் நகைகளை கணேசனுக்கு தெரியாமல் லோகேஸ்வரன் திருடி உள்ளார்.
இந்த நிலையில் வாலாஜா வந்த பிந்து கோஷ், தான் ஏற்கனவே பிரோவில் வைத்து விட்டு சென்ற 13 பவுன் நகைகள் காணாமல் போனது குறித்து தந்தையிடம் விசாரித்தார்.
அப்போது சாவி தொலைந்து விட்டதால் மாற்றுச்சாவியை செய்யப்பட்டது. என கூறினார்.
இது குறித்து வாலாஜா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஸ்வரனை பிடித்து விசாரித்ததில் நகையை திருடியதாக அவர் ஒப்புகொண்டார்.
இதையடுத்து அவரிடம் இருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.






