என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மே 1-ந்தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை
    X

    மே 1-ந்தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை

    • லைசென்சு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
    • கலெக்டர்கள் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மாநில வாணிப கழகத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத் தும் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) மே தினத்தை முன்னிட்டு, மூடிவைக்க வேண்டும்.

    மேலும் அன்றைய தினம் மதுக் கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் லைசென்சு தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் லைசென்சு ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    மதுக்கூட உரிமைதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை கலெக்டர்கள் வளர்மதி, பாஸ்கர பாண் டியன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.

    Next Story
    ×