என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் தர்ணா
    X

    அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் தர்ணா

    • 27-ந் தேதி அன்று பேரூராட்சிமன்ற சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது
    • டெண்டர்களை ரத்து செய்து மறு டெண்டர் நடத்த வேண்டும் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக அ.தி.மு.க மற்றும் பா.ம.க வை சேர்ந்த கவுன்சிலர்கள் 6 பேர் நேற்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்மூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 6 தி.மு.க கவுன்சிலர், 6 அ.தி.மு.க கவுன்சிலர், 2 பா.ம.க கவுன்சிலர்கள், ஒரு சுயேட்சை என 15 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் 3வது வார்டு கவுன்சிலர் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்ததால் அந்த வார்டு காலியாக உள்ளது.

    இந்த நிலையில் அம்மூர் பேரூராட்சியில் இருந்து கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அஜெண்டாவில் வருகிற 27-ந் தேதி அன்று பேரூராட்சிமன்ற சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது என அஜெண்டாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அஜெண்டாவில் வரவு செலவு கணக்கு மற்றும் டெண்டர்கள் குறித்து வெளிப்படை தன்மை இல்லாததால் அனைத்து டெண்டரையும் ரத்து செய்து மறு டெண்டர் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அ.தி.மு.க மற்றும் பா.ம.க கவுன்சிலர்கள் நேற்று மாலை தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மறு டெண்டரை நடத்தி வீடியோ பதிவுகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பேரூராட்சி அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×