என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு
- உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய போது பரிதாபம்
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. அவரது மனைவி வசந்தா (வயது 55).
இவர், சம்பவத்தன்று தக்கோலம் அருகே உள்ள மாரிமங்கலம் கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பின்னர், வசந்தா வீட்டிற்கு வருவதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
கடம்பநல்லூர் -பரமேஸ்வரமங்களம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது திடீரென் மோட்டார் சைக்கிளில் இருந்து வசந்தா கீழே விழுந்தார்.
படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story