என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவன் சாவு"
- நண்பன் படுகாயம்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கவரை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். அவரது மகன் ஹேமச்சந்திரன் (வயது 9), அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவனது நண்பரான பிர சன்னாவுடன் (II) சைக்கிளில் காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் செல்லும் போது, எதிரே வந்த சரக்கு வேன் திடீரென அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதில் ஹேமச்சந்திரனை பாணாவரம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
மேலும் பிரசன்னா வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்ப வம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பள்ளிக்கு சென்ற பாவண்ணன் அங்கு பூச்சி உருண்டையை திடீரென்று விழுங்கியதால் வாந்தி எடுத்துள்ளார்.
- சிகிச்சை பெற்று வந்த பாவண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் பாவண்ணன் (வயது16). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே அரசம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி அன்று பள்ளிக்கு சென்ற பாவண்ணன் அங்கு பூச்சி உருண்டையை திடீரென்று விழுங்கியதால் வாந்தி எடுத்துள்ளார்.
உடனே அந்த மாணவனை ஆசிரியர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பாவண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து பாவண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






