சிப்காட்டில் மயங்கி விழுந்து காவலாளி சாவு

வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை போலீசார் விசாரணை
சிப்காட்டில் மயங்கி விழுந்து காவலாளி சாவு
Published on

ராணிப்பேட்டை:

திருவலம் அருகே உள்ள கெம்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 63). இவர் ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் காவலாளி யாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் உடல்நலம் இல்லாமல் இருந்த இவர் நேற்று தொழிற்சாலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து துளசிராமனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து துளசிராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com