பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

புத்தகத்தில் கையொப்பமிட்டு வாழ்த்து திட்டப்பணிகளை பார்வையிட்டார்
பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய பகு திகளில் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணி களை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.

அப்போது அந்த வழியாக செல்லும்போது அகரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கலெக்டர் சென்றார்.

அங்கு மாணவ-மாணவிகளிடம் திருக்குறள், வாய்ப்பாடு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். அதில் 4-ம் வகுப்பு மாணவி. ராகவி கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறினார்.

இதையடுத்து மாணவியை கலெக்டர் வளர்மதி பாராட்டி புத்தகத்தில் தன் கையொப்பமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பள்ளி ஆசிரியர், மாணவ மாணவிகளை அவர் பாராட்டினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com