என் மலர்
நீங்கள் தேடியது "செத்து மிதந்த மீன்கள்"
- ரசாயன கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு
- நோய் தொற்று ஏற்படும் அபாயம்
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் தடுப்பணையில் ஜிலேபி மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
நகராட்சி கழிவுநீர், சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலந்ததால் ஏராளமான மீன்கள் இறந்ததாக கூறப்படு கிறது. மீன்கள் இறந்து பல நாட்களாக கிடப்பதால் துர் நாற்றம் வீசிவருகிறது. இதனால்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் சாயப்பட்டறை ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள் ஆலையை மூடக்கோரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் மனு
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்-நத்தம் சாலையில் வடுகபட்டி பிரிவு பகுதியில் கடைக்குளம் உள்ளது. இந்த குளத்தில் குறைந்த அளவு மட்டுமே தற்போது தண்ணீர் உள்ளது. அருகில் உள்ள மாம்பழ குடோனில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் குளத்தில் கலப்பதால் மாசடைந்து வருவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த குளத்து நீரை குடித்த கால்நடை உயிரிழந்தது. மேலும் இந்த தண்ணீர் மாசடைந்து வருவதால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் கேள்விக்குறியாக இருப்பதால் இந்த தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
நேற்று குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால் கிராம மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வடுகபட்டி, மேட்டுப்பட்டி கிராம மக்கள் அனைவரும் இன்று மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
சாணார்பட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வெள்ளைக்கண்ணு தலைமையில் சென்ற அவர்கள் மாம்பழ குடோனில் இருந்து கழிவுநீர் குளத்தில்கலப்பதை தடுக்க வேண்டும். சுத்திகரிக்கப்படாத தண்ணீர் வருவதால் இப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர்.
எனவே ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.





