என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன மழை பெய்தது"

    • தீயணைப்புதுறையினர் தீயை அனைத்தனர்
    • சூறை காற்றுடன் கன மழை பெய்தது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் நேற்று பிற்பகல் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    மாலை சுமார் 4 மணிக்கு மேல் திடீரென பலத்த சூறை காற்று வீசத்தொடங்கியது. தொடர்ந்து அவ்வப்போது இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது.

    அப்போது பலத்த சத்தத்துடன் பாணாவரம் காந்தி சிலை எதிரே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு சொந்தமான வீட்டின் பின்பு றம் இருந்த தென்னைமரத்தில் மின்னல் தாக்கியதில் மரத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வக அலுவலர் முரளிமனோகர், கிராம உதவியர் வில்சனை அழைத்து மேலும் தீ பரவாமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    இதனிடையே இத்தகவல் அறிந்து வந்த பாணாவரம் போலீசார், சோளிங்கர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் குமரவேல் தலைமையில் வந்த 3 பேர் கொண்ட குழுவினர் தென்னைமரத் தில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

    • திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், மழை பெய்யாமல் ஏமாற்றி சென்றது.
    • அதன் பிறகு நேற்று மாலையில் சாரலுடன் தொடங்கி இரவு வரை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் ஜூன் மாதம் பெய்யும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாகிக் கொண்டே சென்றது. கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், மழை பெய்யாமல் ஏமாற்றி சென்றது.

    10-ந் தேதி முதல் படிப்படியாக மழை குறையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென வானம் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.

    மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு சற்று ஓய்ந்த மழை பின்னர் மாலையில் சாரலுடன் தொடங்கி இரவு வரை பெய்தது.

    இதனால் கடந்த சில நாட்களாக நகரில் வாட்டி எடுத்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி யடைந்தனர். மழையால் மாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் நனைந்தபடியே வீட்டுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.

    மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 91.2 மி.மீ மழை அளவு பதிவானது. திண்டு க்கல் 26.2, கொடைக்கானல் 19.5, பழனி 3, நத்தம் 14, நிலக்கோட்டை 2, வேட சந்தூர் 3.2, காமாட்சிபுரம் 1.4, பிரையண்ட் பூங்கா 18.7 மி.மீ மழை அளவு பதி வானது.

    • பயிர்கள் மழையின்றி காய்ந்து வாடியது.
    • பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

    தருமபுரி,

    மாதம் தொடங்கியதில் இருந்து மாவட்டம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வந்தது. தமிழகத்தில் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    அதனடிப்படையில் நேற்று மாலை தருமபுரி, நல்லம்பள்ளி, தீர்த்தமலை, நரிபள்ளி, வேட்ரபட்டி, பி.பள்ளிபட்டி, கீரைபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கோடை வெயி–லுக்கு இணையாக மாவட் டத்தில் சுமார் 90 டிகிரி வெயில் பதிவாகி வந்த நிலையில், பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    மேலும் மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள் சோளம், சாமை, கேழ்வரகு, உள்ளிட்ட பயிர்கள் மழையின்றி காய்ந்து வாடியது.

    மேலும் மாவட்ட முழுவதும் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நேரத்தில் நிலத்தில் ஈரம் இல்லாததால் நிலக்கடலையை பயிரிட்ட விவசாயிகள் பறிக்க முடியாமல் தவித்து வந்தநிலையில் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் சிறுதானிய பயிர்களுக்கு நல்ல மழையாக அமைந்துள்ளது.

    • தண்ணீர் வடிகாலில் அதிக அளவில் சென்றது.
    • அதிகாலை 3 மணிக்கு மழை நீர் வரத்து அதிகரித்து, வடிகால் நிரம்பி சாலையிலும் தண்ணீர் ஆறாக சென்றது .

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதனால் தண்ணீர் வடிகாலில் அதிக அளவில் சென்றது. அதிகாலை 3 மணிக்கு மழை நீர் வரத்து அதிகரித்து, வடிகால் நிரம்பி சாலையிலும் தண்ணீர் ஆறாக சென்றது . இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    சாலை ஓரத்தில் உள்ள பல கடைகளிலும் தண்ணீர் புகுந்து விட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் வந்து வடிகாலில் உள்ள அடைப்பை சரி செய்தனர். காலை 7 மணிக்கு மேல் தண்ணீர் வரத்து மெல்ல மெல்ல குறைந்ததால், சாலையில் சென்ற தண்ணீர் வடிந்து வருகிறது.

    ×