என் மலர்
ராமநாதபுரம்
- ஓட்டலுக்கு அதிகாரிகள் நோட்டீசு அனுப்பப்பட்டது.
- உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாரதி நகரில் உள்ள ஒரு பிரபல பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கி சாப்பிட்ட முட்டை பிரியாணியில் புழு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்த ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்க வேல் மற்றும் கீழக்கரை உணவு பாதுகாப்பு ஜெயராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அந்த உணவு மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள் ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவை பொருத்து சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தரமற்ற உணவு விற்பனை செய்தது தொடர்பாக ஓட்டலுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.
- ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
- ராமநாதபுரம் நகர் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். இணை செய லாளர் மலைச்செல்வம் மற்றும் துணைச் செயலா ளர்கள் முத்துக்கூரி, மகேஷ் குமார், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பேரன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஜூன் 15-ந் தேதி தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடை பெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் தலா 5 வாகனங்கள் வீதம் நிர்வாகிகள் தொண்டர்கள், திரண்டு செல்ல முடிவு செய்யப் பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் ஒடிசா மாநி லத்தில் நடந்த கோர ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முனியசாமி (ராமநாதபுரம்), சேகர் (திருப்புல்லாணி), சுடர் (மண்டபம்), லாசர் (கடலாடி ஒன்றிய செயலாளர்), பெரியசாமி (முதுகுளத்தூர்), ராஜா (நயினார்கோவில்), பரமக்குடி நகர் செயலாளர் சிங்கராஜன் உள்பட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் நகர் செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்
- கீழக்கரையில் பள்ளி செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் கிடக்கிறது.
- பள்ளி திறப்பதற்கு முன் நிறைவு செய்யப்படும்
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது.
ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை. குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் கிடக்கின்றன. மறுபக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்னமும் சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் பள்ளி வாகனங்கள் செல்வதற்கும், மாணவர்கள் நடந்து செல்வதற்கும், மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் வாகனங்களை ஓட்டி வருவதற்கும் சிரமமாக இருக்கும்.
இதுகுறித்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை பணிகள் 5-ந்தேதி தொடங்கி பள்ளி திறப்பதற்கு முன் நிறைவு செய்யப்படும் என்றார்.
வழக்கம்போல் கண்துடைப்பு அறிவிப்பாக இல்லாமல் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி விரைவாக இந்த சாலையை அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- விடுதிகளில் தங்கும் வாடகை கட்டண பட்டியல் வைக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தாசில்தார் கூறினார்.
- கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தற்போது சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் தர்காவிற்கு வந்து தங்கி இருந்து நேர்த்திகளை செலுத்தி விட்டு செல்கின்ற னர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் தங்கும் விடுதி களில் மற்ற நாட்களை விட பல மடங்கு அதிகம் பணம் வசூல் செய்து வருவதாக கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஏர்வாடி தர்காவில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதி களுக்கு சென்று அங்குள்ள பதிவு புத்தகத்தை எடுத்து சோதனை செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், அப்போது வாடகை கட்டண பட்டி யலை தங்கும் விடுதிகளில் பயணிகளின் பார்வைக்கு தெரியும் அளவிற்கு வைக்க வேண்டும். முறையான பணம் வாங்கிய பிறகு பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும். கூடுதல் பணம் வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளி யூர் மற்றும் வெளி மாநி லங்களில் இருந்து வரக் கூடிய யாத்ரீகர்கள் தங்கும் விடுதிகளை தூய்மை யாக வைத்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் விடுதி யின் உரிமம் ரத்து செய்யப் படும் என்றார்.
- பாலிதீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
- சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ராமநாதபுரம்
தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த 2016-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல முறை வாரச்சந்தை, வணிக நிறுவனங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது அதிகாரிகள் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதால் மீண்டும் பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டினம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில இறைச்சிக் கடை களிலும், மீன் கடைகளிலும், ராமநாதபுரம் வாரச் சந்தையிலும் பாலிதீன் பைகளை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
ஒரு முறை பயன்படுத்தி விட்டு குப்பையில் வீசி எறியப்படும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இவற்றை பறிமுதல் செய்ய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வாரச்சந்தை நடைபெறும் புதன்கிழமை அன்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாலிதீன் பைகளில் வியாபாரிகள் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இது தவிர மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகளில் பாலிதீன் பைகளில் இறைச்சி வழங்கப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் பைகளில் பொருட்கள் வழங்குவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்தபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதற்கு பதிலாக மஞ்சள் பை, சணல் பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் பிரியாணி கடை உள்ளது.
- ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் கடையில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் பிரியாணி கடை உள்ளது. இந்த கடையில் கோவையை சேர்ந்த 2 பேர் முட்டை பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த பிரியாணியில் புழு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகிகளிடம் கேட்டபோது முறையான பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்த ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் அங்கு சென்று ஆய்வு செய்தார். புழு கிடந்ததாக கூறப்படும் முட்டை பிரியாணி முழுவதையும் கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புழுவுடன் இருந்த மீதி பிரியாணியையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+2
- அசோக்குமார் கோர்ட்டுக்குள் புகுந்து வெட்டியது ஏன்? என்று கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
- போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தலைமறைவாக இருந்து வந்த கொக்கி குமார் தற்போது சிக்கியுள்ளார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சிவஞானபுரத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அசோக் குமார்(வயது28). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. கேணிக்கரை போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சந்துரு சிவஞானபுரத்தில் உள்ள பால் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 13-ந் தேதி கடையில் இருந்த சந்துருவை, அசோக்குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இந்த வழக்கில் கைதான அசோக்குமார் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தினமும் ராமநாதபுரம் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார். அதேபோல் நேற்றும் கையெழுதிடுவதற்காக வந்த அசோக்குமார் கோர்ட்டின் அறையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு சந்துருவின் உறவினரான ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ரவுடி குமார் என்கிற கொக்கிக்குமார்(26), சண்முகநாதன்(22) ஆகியோர் வந்தனர். அவர்கள் கோர்ட்டின் அறையில் நின்று கொண்டிருந்த அசோக் குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.
இதில் படுகாயமடைந்த அசோக்குமாரை கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை அசோக்குமார் கோர்ட்டுக்குள் புகுந்து வெட்டியது ஏன்? என்று கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அசோக் குமாருக்கும் கொக்கி குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தனது உறவினராக சந்துருவை தாக்கிய தகவல் அறிந்த கொக்கி குமார், அசோக்குமாரை பழி தீர்க்க திட்டமிட்டு கோர்ட்டுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய தகவல் தெரியவந்தது.
தப்பி சென்ற கொக்கி குமார், சண்முகநாதனை பிடிக்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கொக்கி குமார் உச்சிப்புளி பிரப்பன் வலசையில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்ததை அவரது செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு கொக்கி குமார் தப்பியோட முயன்றார். இதனால் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கொக்கி குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். முதலில் சுடப்பட்ட போது கொக்கி குமார் மீது படவில்லை. இதனால் இன்ஸ்பெக்டர் 2-வது முறையாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் கொக்கி குமாரின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் தொடர்ந்து ஓட முடியாமல் கீழே விழுந்தார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொக்கிகுமார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவர் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் காயமடைந்தனர். அவர்களும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கொக்கி குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். திருப்பூர் பகுதியில் பதுங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்திருக்கிறார்.
அன்றைய தினமே ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரை வெட்டி விட்டு தப்பினார். பின்பு கொத்தர் தெருவை சேர்ந்த சூர்யா என்பவரை தாக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சூர்யா வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
இதனால் கொக்கி குமாரின் தாக்குதலில் இருந்து தப்பியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று கோா்ட்டுக்குள் புகுந்து அசோக்குமாரை வெட்டி விட்டு கொக்கிகுமார் தப்பினார்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் மூலம் கொக்கி குமாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். அங்கு சென்று கைது செய்ய முயன்ற போது இன்ஸ் பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி னார்.
இதனால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தலைமறைவாக இருந்து வந்த கொக்கி குமார் தற்போது சிக்கியுள்ளார்.
- கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
- வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் மற்றும் ராமநாதபுரம் வட்டத்தில் பொதுப்பணித்துறையில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமக்குடி வட்டம், பாண்டியூர், சிறகிக்கோட்டை, தொருவர், காரேந்தல் ஆகிய பகுதிகளுக்கு சென்று வைகை ஆற்றில் இருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாய்கள் மற்றும் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளில் கரைகள் வலுப்படுத்தும் பணி, தடுப்பணைகள் கட்டும் பணி மற்றும் பாசன கண்மாய்களில் கழுங்குகள், மடைகள் புதிதாக கட்டும் பணி ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து வரும் மழை கலத்திற்குள் முடித்திட வேண்டும்.
வைகை ஆற்றில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரக்கூடிய தண்ணீர் பாசன கண்மாய்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைக்க குறித்து சிறப்பு கவனம் அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.
மேலும் மழைக்காலம் துவங்குவதற்குள் கருவேல மரங்களை அகற்றி கால்வாய்களை சீரமைத்திட பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் சென்று முழு கொள்ளளவை எட்டியதும் அதனை ஒட்டி யுள்ள கிராம பகுதிகளில் உள்ள பாசன கண்மாய்க ளுக்கு தண்ணீர் கொண்டு சென்று முழுமையாக நிரப்பிட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் தடுத்து விவசாயிகளுக்கு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆனந்த் பாபு, வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாழவந்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- நெல்மடூர் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் செய்திருந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே நெல்மடூர் கிராமத்தில் ஸ்ரீ வாழவந்தாள் அம்மன், வைரவர் சுவாமி கோவில் உள்ளது. நேற்று இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா 2 தினங்களுக்கு முன் தொடங்கியது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக் கிரக ஹோமம், கோ பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து முதலாம் கால யாகபூஜை, 2-ம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் திரவிய ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதன்பின் பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நெல்மடூர் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் செய்திருந்தனர்.
- மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு முருகேசன் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.
- மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
பரமக்குடி அ ருகே உள்ள குறிஞ்சான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வர் ஆறுமுகம். இவர் சில தினத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், ஆறுமுகத்தின் குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
இதில் பரமக்குடி வட்டாட்சியர் ரவி, பரமக்குடி தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
- தடையில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு, பகல் பாராமல் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் வியாபாரிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த மின்தடையால், மேலும் அவதிக்குள்ளாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தமாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் கண்டு கொள்வது கிடையாது. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் இரவு நேத்தில் மின் தடை ஏற்படுத்தி வருவது மக்களுக்கு பெரும் வேதனையை அளித்தள்ளது.
இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடை யால் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக்கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கத்தை தொலைத்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த தொடர் மின்தடை ஏற்பட காரணம் தெரியாமல் பொதுமக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே மின்சார வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடையில்லா மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அபிராமத்தில் சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் பார்த்தி பனூர், கமுதி வழியாக சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்த சாலையில் உள்ள அச்சங்குளம், அகத்தாரிருப்பு, நத்தம், கமுதி, பசும்பொன் அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் அதிக அளவில் ஆடு, மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்ததுக்கள் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே மாடுகள் அமர்ந்து விடுவதாலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 85 கி.மீ வேகத்திற்கும் மேலாக செல்லும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கால்நடைகள் திடீரென ரோட்டின் குறுக்கே செல்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.
எனவே முக்கிய சாலையான இப்பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.






