என் மலர்
புதுக்கோட்டை
- பொன்னமராவதி வாரச்சந்தையில் இரும்பு மேற்கூரை விழுந்து விவசாயி பலி
- பலத்த சூறைக்காற்றினால் நேர்ந்த பரிதாபம்
பொன்னமராவதி,
பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது. இதில் காய்கறி விற்று கொண்டிருந்த சொக்கநாதப் பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 55) என்பவர் மீது ஒரு இரும்பு கூரை விழுந்து அமுக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை கெட்டி தீர்த்தது
- சாலையோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது .திடீரென்று பலத்த சூறாவளி காற்று வீசித்தொடங்கிய சில வினாடிகளில் பலத்த காற்றுடன் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்றின் காரணமாக மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னி பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. அதேபோன்று சாலையோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. அதனை தீயணைப்பு படையினர் அப்புறப்படுத்தினர்.
- பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது.
- சூறாவளி காற்றில் பொன்னமராவதி பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.
பொன்னமராவதி:
தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் பருவமழை பருவம் தப்பி சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
பின்னர் மாலை யாரும் எதிர்பாராத விதமாக பலத்த சூறாவளி காற்று வீசியது. அடுத்த சில வினாடிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது.
இதில் பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது. இதில் காய்கறி விற்று கொண்டிருந்த சொக்கநாதப்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 55) என்பவர் மீது ஒரு இரும்பு கூரை விழுந்து அமுக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
மேலும் சூறாவளி காற்றில் பொன்னமராவதி பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அதேபோன்று மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்புகளை சரி செய்தனர்.
- முரட்டு சோளகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது
- 13 பவுன் நகை, பட்டுப் புடவைகள் ரொக்கம் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முரட்டு சோளகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது60). ஓய்வு பெற்ற மாவட்ட நில அளவை அலுவலர். தற்போது இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது உறவினர் இல்ல திருமணத்திற்கு திண்டுக்கல் சென்றிருந்தனர். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவு திறக்கப்பட்டு உள்ளிருந்த 13 பவுன் நகை, பட்டுப் புடவைகள் ரொக்கம் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சின்னத்துரை கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.சின்னத்துரை கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- வருகிற 26-ந் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- புதுக்கோட்டை கலெக்டர் தலைமையில் கூட்டம் நடந்தது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது.புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன் (பொது), வேல்முருகன் (தொழில்நெறி வழிகாட்டல்), வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை விராலிமலை தனியார் உலோக ஆலையில் சுடு தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி பலியானார்
- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு நிலவியது
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராஜாளிபட்டியை சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் செல்வம்(வயது 55). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். ராஜாளிப்பட்டியில் உள்ள முதல் மனைவிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். புதுக்கோட்டையில் உள்ள இரண்டாவது மனைவி யுடன் வசித்து வந்த செல்வம் விராலிமலையில் உள்ள தனியார் உலோக தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அன்றாடம் புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை உலோக தொழிற்சாலைக்கு பணிக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல அவர் இரவு பணி செய்து வந்தார். அதிகாலை 5 மணி அளவில் அவர் பணி செய்து கொண்டிருந்த போது, தொழிற்சாலையில் உள்ள காஸ்டிங் உலோக சுடு தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதனை கண்ட மற்ற தொழிலா ளர்கள் அவரை மீட்க போராடி உள்ளனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு வந்த விராலிமலை போலீசார் செல்வத்தின் உடலை, சுடு தொட்டிக்குள் இருந்து மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உடலை வாங்க மறுத்து, தொழிற்சாலையின் முன்பாக செல்வத்தின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சாலைக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. குறிப்பிட்டவர்கள் அழைக்கப்பட்டு தொழிற்சாலைக்குள் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
விராலிமலை உலோக தொழிற்சாலையில் சுடு தொட்டிக்குள் தொழிலாளி ஒருவர் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆவணி திருவிழா நடைபெற்றது
- பால்குடம் எடுத்தும், தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மண்டக படித்தார்களால், ஆவணி முதல் ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பால்குடம் எடுத்தும், தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாலை, பூத்தட்டு, முளைப்பாரி எடுத்தல் மற்றும் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- புதுக்கோட்டை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 331 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
- கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுத்திறனாளிகளிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, துணை ஆட்சியர்(பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்று த்திறனாளிகள் நல அலுவலர்எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்க போராடி உள்ளனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- தொழிற்சாலையில் சுடு தொட்டிக்குள் தொழிலாளி ஒருவர் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராஜாளிபட்டியை சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் செல்வம்(வயது 55). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். ராஜாளிப்பட்டியில் உள்ள முதல் மனைவிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். புதுக்கோட்டையில் உள்ள இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த செல்வம் விராலிமலையில் உள்ள தனியார் உலோக தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அன்றாடம் புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை உலோக தொழிற்சாலைக்கு பணிக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல அவர் இரவு பணி செய்து வந்தார். அதிகாலை 5 மணி அளவில் அவர் பணி செய்து கொண்டிருந்த போது, தொழிற்சாலையில் உள்ள காஸ்டிங் உலோக சுடு தொட்டிக்குள் தவறி விழுந்தார். இதனை கண்ட மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்க போராடி உள்ளனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு வந்த விராலிமலை போலீசார் செல்வத்தின் உடலை, சுடு தொட்டிக்குள் இருந்து மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விராலிமலை உலோக தொழிற்சாலையில் சுடு தொட்டிக்குள் தொழிலாளி ஒருவர் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை
- 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல்
புதுக்கோட்டை,
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் காலாடிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த முத்துகிருஷ்ணன் (வயது 44), அப்துல்மஜீது (70), ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைமுத்துமாரியம்மன் கோவில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் வருடம் தோறும் மண்டக படித்தார்களா திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். .அதேபோல் இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பால்குடம் எடுத்தும் தொட்டில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் மாலை பூத்தட்டு மற்றும் முளைப்பாரி எடுத்தல் அது விமர்சையாக நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் அம்பாள் திருவீதி உலா அதிர்வேட்டு முழங்க மேலதாளங்களுடன் நடைபெற்றது..விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.
- காதல் திருமணம் செய்து கொண்ட புதுக்கோட்டையை சேர்ந்த, புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- புதுக்கோட்டையில் உள்ள தாயை பார்க்க முடியாத ஏக்கத்தில் துயர முடிவு
திருச்சி,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை. இவரது மகள் விஜயலட்சுமி (வயது 20). இவருக்கும் மணப்பாறை புதுமணியாரம் பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு விஜயலட்சுமி பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.பின்னர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து வெளியேறிய விஜயலட்சுமி கடந்த மாதம் 2-ம் தேதி அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் காதலனை திருமணம் செய்தார். அதன் பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கணவர் வீட்டில் குடும்பம் நடத்தினார்.இந்த நிலையில் அவருக்கு தாயாரை பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. ஆனால் காதல் திருமண தகராறு காரணமாக பெற்றோர் வீட்டுக்கு செல்ல இயலவில்லை. இதனால் மனக்குழப்பத்துக்கு ஆளான விஜயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் விஜயலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விஜயலட்சுமியின் தாயார் அமுத ராணி வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் செய்த இளம் பெண் தாயை பார்க்க முடியாத ஏக்கத்தில் ஒரே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






