என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடந்து சென்ற வி.ஏ.ஓ மயங்கி விழுந்து உயிரிழப்பு
- புதுக்கோட்டையில் நடந்து சென்ற வி.ஏ.ஓ திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்தார்
- புதுக்கோட்டையில் நடந்து சென்ற வி.ஏ.ஓ திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே வெள்ளனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கந்தர்வகோட்டை அருகே தெம்மாவூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை ெபற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை கிழக்க 2-ம் வீதியில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே கண்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






