என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நரியன் புதுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் அன்பரசன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
அதன்பேரில் கடந்த 19-ந் தேதி மாவட்ட கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி விசாரணை நடத்தி, அன்பரசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் அன்பரசனுக்கு உடந்தையாக, பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன் செயல் பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதனிடையே 2 பேர் மீதும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் தலை மறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 80). நாதஸ்வர கலைஞரான இவர், தி.மு.க. கிளைச்செயலாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கணேசன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை பற்றி ஒளிபரப்பான செய்திகளை பார்த்து கொண்டு இருந்த கணேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதே போல் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டை சேர்ந்தவர் நல்லுசாமி (60). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் தி.மு.க. தொண்டரும் ஆவார்.
இவரும் நேற்று முன்தினம் இரவு கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு பற்றிய செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மரணமடைந்த 2 பேரின் உடலுக்கும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiHealth
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையிலான போலீசார் ஆவுடையார்கோவில் அருகே துரைராசபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் செல்போன் கோபுரத்திற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு ஆட்டோவில் வந்த 5 பேரையும் அழைத்து சென்று, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில், இவர்கள் திருவாடானை தாலுகா ஆரக்கோட்டை இலுப்பக்குடியை சேர்ந்த ஆனந்தபிரசாத் (வயது 20), கரூர் களபத்தை சேர்ந்த ராஜபாரதி (26), அறந்தாங்கி எருக்கலக்கோட்டையை சேர்ந்த பாண்டியராஜன் (30), அதே பகுதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (30), கண்ணன் (25) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆவுடையார்கோவில், எழுநூற்றி மங்களம் மற்றும் புதுக்கோட்டை பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களில் உள்ள பேட்டரிகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சரக்கு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அறந்தாங்கி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் செல்போன் கோபுரத்தில் உள்ள பேட்டரிகளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரில் வந்த திருச்சி மணிகண்டம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன் (20), சதிஷ்குமார் (22). ஜெரல்டு (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் 24 செல்போன் பேட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை இணைப்புச் சங்கங்களாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இத்தகைய கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாய பயிர்க்கடன்கள், விவசாய நகைக்கடன்கள் மற்றும் விவசாய கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் மூலம் விவசாய பயிர்க்கடன்கள் மற்றும் விவசாயகடன் அட்டை திட்டம் மூலமாகவும் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பயிர்க்கடன் என்பது விவசாயிகளின் உயிர்க்கடன். இத்தகைய பயிர்க்கடன்கள் அனைத்து விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். பயிர்க்கடன்கள் பெற்ற விவசாயிகள் குறித்த தவணைத் தேதிக்குள் திருப்பிச் செலுத்தும் நேர்வுகளில் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது.
இதற்கான வட்டியை அரசாங்கம் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. எனவே கடன் பெற தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெற்று விவசாயத்தை பெருக்கிக் கொள்ளலாம். புதிய விவசாயிகளும் இதன் மூலம் பயன் பெறலாம்.
தற்போது பயிர்க்கடன்கள் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஒரு ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் உள்ள விவசாயிகளும் இக்கடன்களை எளிதாக பெற முடியும்.
விவசாய கடன் பெற்ற அனைத்து விவசாயிகளும் பயிர்க்காப்பீடு செய்யப்பட வேண்டும். விவசாயிகள் அந்தந்த விவகார எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி தேவையான ஆவணங்களுடன் மனுச் செய்து கடன் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 9894040002 என்ற தொலைபேசி எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மீராபாய் தெரிவித்துள்ளார்.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை வர்த்தக சங்க கூட்டம் சங்க தலைவர் பழக்கடை மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர் சந்தா மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
மேலும் கந்தர்வக்கோட்டை பழைய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடை வீதிகளில் பட்டாசு வெடிப்பதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்தர்வக்கோட்டை முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும், சங்க கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் தலைவர் சேட்டு, பொருளாளர் செந்தில், அட்மா தமிழழகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள கலந்து கொண்டனர். #busstation
திருவரங்குளம்:
திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் திருவரங்குளம் அரசினர் மாணவர் விடுதியில் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் (உயர்நிலை) அன்பழகன் முன்னிலையில் மருத்துவ முகாம் மற்றும் மாணவர் விடுதி சுகாதார ஆய்வுப்பணி நடை பெற்றது.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தம்பிதுரை கலந்துகொண்டு மாணவர் விடுதியில் ஆய்வுப்பணிகளை மேற் கொண்டும் விடுதி மாணவர்கள் 50 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்.
முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர் விடுதியில் சுகாதார ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை விடுதி காப்பாளர் செல்வக்குமார் மற்றும் விடுதிப் பணியாளர்கள் ரவிச்சந்திரன், நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
திருச்சி ராஜாகாலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பூபதி கண்ணன் (வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை பிரிவு) பணியாற்றி வந்தார். பூபதி கண்ணனின் மனைவியான அனுராதா திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். பூபதி கண்ணன் தினமும் காரில் பணிக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 27-ந் தேதி பணிக்கு சென்ற பூபதி கண்ணன், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை மனைவி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பூபதி கண்ணன் திருச்சி அருகே மாத்தூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே கார் நின்றது. கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.
இந்த கொலை சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கொலையான பூபதி கண்ணனின் செல்போனை வைத்து, அவரிடம் யார் அதிகம் பேசி உள்ளனர் என போலீசார் விசாரித்தனர்.
இதில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அவருடன் டைப்பிஸ்டாக பணியாற்றும் திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த சவுந்தர்யா அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பூபதி கண்ணன் திருச்சியில் இருந்து பணிக்கும் செல்லும் போது, சவுந்தர்யாவையும் காரில் ஏற்றிச்சென்று வந்துள்ளார். மேலும் 2 பேரும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியதால் அவர்களது பழக்கம் நெருக்கமானது. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. சவுந்தர்யாவின் கணவர் இறந்து விட்டார்.
சம்பவத்தன்று பூபதி கண்ணனுடன் சவுந்தர்யா காரில் வந்துள்ளார். தொண்டைமான்நல்லூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சோதனையிட்ட போது, பூபதி கண்ணனின் காரில் சவுந்தர்யா இருந்தது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரையூர் அருகே உள்ள கீழத்தானியம் ஆற்றுப்பகுதியில் அனுதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா மற்றும் அதிகாரிகள் கீழத்தானியம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது சூரப்பட்டியில் அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் உணவு தொழில் புரிவோர்கள் தங்களின் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ்களை பெற மற்றும் பொது மக்கள் உணவு சம்பந்தமான புகார்களை தெரிவிக்கும் பொருட்டு புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையில் புதிதாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் குருசாமி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் புதுக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலராகவும், தியாகராஜன் அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி வட்டாரத்திற்கும், வேலுவாசகம் அறந்தாங்கி நகராட்சி மற்றும் அறந்தாங்கி வட்டாரத்திற்கும், அருண்பிரகாஷ் அரிமளம் மற்றும் திருமயம் வட்டாரத்திற்கும், சிவக்குமார் ஆவுடையார்க்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டாரத்திற்கும், கார்த்திக் குன்றாண்டார்கோவில் மற்றும் விராலிமலை வட்டாரத்திற்கும், ராமநாதன் திருவரங்குளம் வட்டாரத்திற்கும், விஜயகுமார் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி வட்டாரத்திற்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் உணவு கலப்படம் மற்றும் தரங்கள் குறித்து 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். #FoodOfficers
வருவாய்த்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 509 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சம் மதிப்பீட்டிலும், விராலிமலையில் 301 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விராலிமலை மலங்குளம் ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. இதேபோல் விராலிமலை சந்தை ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. விராலிமலை முருகன் கோவில் மலைக்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நேரடியாக செல்லும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விராலிமலை சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மணப்பாறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. திருச்சியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசுசொத்து வரி, வீட்டு வரிகுடிநீர்வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளதை கண்டித்து குன்றாண்டார் கோவில் ஒன்றியம் கீரனூர் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீரனூர் கடைவீதியில் உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏழுமலை தலைமை தாங்கினார், டேவிட் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தை சிதம்பரம் தொடங்கிவைத்து பேசினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராசன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை பற்றி விளக்கி பேசினார்.உடனடியாக தமிழக அரசு உயர்த்தப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் எனகூறினார். #tamilnews






