என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கொத்தகம்கிராம–த்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைநீர்த்தே–க்கத் தொட்டியை அப்புற–ப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • இடிந்து விழும் நிலையில் உள்ளது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊரா–ட்சியில்கொத்தகம் கிராமத்தில் அங்கன்வாடிமையம் அருகே பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    கிராம மக்கள் செல்லும் சாலை அருகே உள்ள இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் சாலையில் செல்லும் பொது மக்களுக்கும், அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் சிறுவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    எனவே விபத்துநடக்கும் முன்னரே இந்த பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி, விபத்தை தவிர்க்க கிராம மக்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமணம் செய்த காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    • காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள மழையூர் காவல் நிலையத்தில் துவார் அ டுத்த கீழே வாண்டான்விடுதியை சேர்ந்த ரெங்கசாமி மகள் கவிதா. இவரும் அதே பகுதியை சேர்ந்த திருப்பூரில் கூலி வேலை செய்து வரும் செல்லக்கண்ணும் (வயது 24) காதலித்து வந்துள்ளனர்.

    இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்த அவர்கள், திருப்பூர் ஐயப்பன் கோவில் செய்து கொண்டனர். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று கவிதாவின் பெற்றோர்மழையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இதனை அறிந்த அவர்கள் உடனடியாக தாங்களால் ஏதும் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்று ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி இருதரப்பு பெற்றோர்களு க்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இருதரப்பு பெற்றோர்களும் காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று கூறி சென்றுவிட்டதால்,

    காதல் ஜோடி வயதை காரணம்காட்டி போலீசார் காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

    • குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விணாகிறது.
    • போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரகிரா–மங்களுக்கு திருச்சிகொள்ளி–டத்தில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வருகிறது. இந்த நிலையில் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு

    குடிநீர் வீணாக சாலைகளிலும் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் செல்வதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.மேலும், பொது மக்களுக்கும் குடிநீர் பிரச்சனை ஏற்ப–டுகிறது.

    சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும்,கந்தர்வ–கோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிகாரிக–ளிடம் ஒன்றிய கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறு–த்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க–வில்லை என கூறப்ப–டுகிறது.

    எனவே குடிநீர்தேவை––யின் அவசியத்தை கருதி–காவிரி குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    • அரசுப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற உள்ளது.
    • 4 இடங்களில் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இன்று 4 இடங்களில் தொடங்கி அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவதற்காக தமிழக அரசு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது.

    இதன் மூலம் புதுக்கோட்ைட மாவட்டத்தில் நிகழாண்டு 19 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், 5 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், மற்றும் ஒருவர் அரசு கல்லூரியில் பி.டி.எஸ், 8 பேர் தனியார் கல்லூரிகளில் பி.டி.எஸ். பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

    மேலும் உள் இட ஒதுக்கீட்டில் இல்லாமல் சிறப்பு பிரிவில் ஒரு மாணவிக்கு அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ், சீட் கிடைத்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொததம் 34 பேருக்கு மருத்துவம் பயில் சீட் கிடைத்தள்ளதால் மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. அதன் பிறம் அடுத்தடுத்த கலந்தாய்வுகளில் சிலருக்கு மருத்துவ சீட் கிடைத்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ சீட் கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.

    இந்நிலையில் இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிகழாண்டு மாவட்டத்தில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலுப்பூர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நீட்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இது குறித்து கல்வித்துறை அலுவலர் கூறியாவது :

    கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. அற்கு முன்பு சில தொழில்நுட்ப வசதிகள் உள்ள பள்ளிகளில் மட்டும் காணொலி வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழாண்டு தமிழகத்திலேயே சேலத்துக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்த்தில் தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

    இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதாக 4 இடங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்று (22-ந்தேதி) தொடங்கி வருகிற ஜூலை 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 850 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றனர். 

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் கடந்த ஆண்டுகளை விட கடும் சரிவை சந்தித்து ள்ளது.
    • வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவில்லை

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 106 அரசு பள்ளிகள் உட்பட 172 பள்ளிகளைச் சேர்ந்த மாணர்கள பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதே போன்று 215 அரசுப் பள்ளிகள் உட்பட 333 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ள புதுக்கோட்டையில் கடந்த 2020-ல் 93.26 சதவீதமாக இருந்த பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 2022-ல் 91.58 சதவீதமாக குறைந்துள்ளது.

    இதே போன்று 10-ம் வகுப்பு தேர்ச்சியைப்பொறுத்தவரை 2020-ல் 96.41 சதவீதமாக இருந்தது. தற்போது 87.85 சதவீதமாக குறைந்துள்ளது. இடையில் 2021-ம் ஆண்டில் படித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் மாநில அளவிலான பட்டியலில் முன்னேறி இந்த புதுக்கோட்டை மாவட்டம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

    இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் கூறிய போது :-

    தற்போது பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது.

    அதாவது கடந்த 2020-ல் பிளஸ் 2 தேர்வில் 16-வது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் 31-வது இடத்துக்கு சென்று விட்டது. இதே போன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 17-வது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் 31-வது இடத்துக்கு சென்று விட்டது.

    இதே போன்று 100 சவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது. இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அரசின் திட்டங்கள் நம் மாவட்டத்தில் முறையாக அமல்படுத்தவில்லையோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு தொழிற்கல்விகளை கூட கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கற்றல், கற்பித்தலில் உள்ள இடைளெியை போக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து ஆசிரியர்களிடம் போட்ட போது கொரோனா பரவலால் தேர்ச்சி பெற்ற அனைவரும் பொதுத்தேர்வை எழுதினர். முறையாக படிக்காமல் தேர்வுக்கு செனறால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தோரால் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போயிருக்கலாம்.

    மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. அத்துடன் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பப்படவில்லை. மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது என்றனர். 

    • கோவிலில் நிறுத்திய இருசக்கர வாகனம் திருட்டு போனது
    • மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் நாகராஜ் (வயது 49). கூலித் தொழிலாளியான இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.

    பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது.

    இது குறித்து அவர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பள்ளியின் மேற்கூறை இடிந்துவிழுந்து காயம் அடைந்த மாணவனுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினார்.
    • கலெக்டரும் ஆறுதல் கூறினார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே உள்ள எஸ்.களபம் ஊராட் சிக்குட்பட்ட களபம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் கடந்த 40 ஆண்டுகளாக பாழடைந்த நிலையிலேயே உள்ளது. 40 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் பள்ளி வகுப்புகள் தொடங்கி நடை–பெற்று வந்த நிலை–யில் காலை 11.30 மணிய–ளவில் பள்ளியின் மேற் கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வகுப்பறையில் இருந்த 4-ம் வகுப்பு மாணவர் பரத் (வயது 9) காயம் அடைந்தார். தலையில் ரத்த காயத் துடன் உடனடியாக அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முத–லுதவி சிகிச்சைக்கு பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனும–திக்கப்பட்டார்.

    தகவலின் பேரில் உடன–டியாக அங்கு சென்ற அமைச்சர் சிவ.வீ.மெய்ய–நாதன் மாணவருக்கு ஆறு–தல் கூறியதோடு, உயர் சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொண்டார். இதற்கி–டையே கவனக்குறைவாக செயல்பட்டதாக பள்ளி–யின் தலைமை ஆசிரியை மகாலட்சுமியை சஸ்பெண்டு செய்து, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி மஞ்சுளா உத்தர–விட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளியின் சுற்று சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் கடந்த 40 ஆண்டுடுகளுக்கு மேலாக பாழடைந்த நிலையில் இருந்து வருவதாகவும், தாங்கள் பலமுறை பள்ளிக்குரிய அலுவலர்களிடம் மற்றும் ஒன்றிய ஆணையரிடமும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதனால் ஏற்பட்ட விபத்தில் மாணவர் உயிர் தப்பியுள்ளார். மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர், மேற்கூரைகள் இடிந்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளதாக கூறினார்.

    இத்தகவல் அறிந்த கறம்பக்குடி ஒன்றிய ஆணையர் நளினி மற்றும் கிராம வட்டார வளர்ச்சி தமிழ்செல்வன், கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • அக்கினி ஆற்றில் மண் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 5 ேபர் கைது ெசய்யப்பட்டனர்.

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி அக்கினி ஆற்றில் மாட்டு வண்டியில் மண் அள்ளி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மணல் கடத்தலை தடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கறம்பக்குடியை மணலுடன் மாட்டு வண்டிகள் கடக்க முயற்சி செய்த போது, புதுக்கோட்டை கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இதில் மணல் கடத்தி வந்த 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இடையாத்தி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 58), ரெங்கராஜ் (45), ரெங்கசாமி (27), சிதம்பரம் (72), பழனி (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    முத்துச்சாமி (47) என்பவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணமேல்குடி அரசு பள்ளி மாணவிக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.
    • ஆசிரியர்கள் பாராட்டினர்.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 13 ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அவற்றில் மணமேல்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சீனி ராஜஸ்ரீ உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தார். அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்கி கௌரவித்தார். மேலும் சாதனை படைத்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியை கங்கா கௌரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • வாகன விபத்தில் 2 பேர் பலியானார்கள்
    • இதில் சம்பவ இடத்திலேயே சண்முகவே், ஆனந்த் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கச்சிரான்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல்(வயது40). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ஆனந்த்(37) இவர்கள் இருவரும் ஆலங்குடியிலிருந்து திருவரங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.

    ஆயிப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சண்முகவே், ஆனந்த் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பகெ்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து கந்தர்வக்கோட்டை அருகே வீரடிப்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரெங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கு மிளகு சாகுபடி பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
    • 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    மலை சார்ந்த இடங்களில் மட்டுந்தான் மிளகு சாகுபடி செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி ஆலங்குடி பகுதி விவசாயிகள் சமவெளியி லும் மிளகு விவசாயம் செய்ய முடியும் என நிரூபித்திருந்த நிலையி ல், காவேரி கூக்குரல் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகளுக்கு சமவெளியில் மிளகு சாகுபடி கள பயிற்சியும், கருத்தரங்கும் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கு விழாவை தணபதி (தலைவர் இந்திய விவசாய சங்கம்) பரத் சீனிவாசன், (போலீஸ் துணை சூப்பிரண்டு) மரம் கண்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பல வருடங்களாக மிளகு சாகுபடி செய்து வெற்றிகரமாக மிளகு உற் பத்தி செய்து வரும் பால்சாமி, ராஜாகண்ணு, பாக்கியராஜ், செந்தமி ழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களின் அனுபவங்க ளை கருத்தரங்கில் பிற விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் ராமசிவக்குமார் மற்றும் கூடுதல் இயக்குனர் செந் தில்குமார் அவர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக காவேரி கூக்குரல் திட்ட ஒருங்கிணைப்பாளர் விவசாயிகளையும் அதிகாரிகளையும் வரவேற்றார். மேலும் கரு த்தரங்குக்கு வந்திருந்த விவசாயிகள் அனைவரும் வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மிளகு சாகுபடி பயிரிட்டிருந்த தோட்டத்தில் மிளகு செடிகளை பார்வையிட்டனர்.

    இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநில விவசாயிகள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • புனித பாத்திமா மாதா தேர்பவனி நடைபெற்றது.
    • வான வேடிக்கைகளுடன் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள புனித பாத்திமா மாதா தேவாலய தேர் திரு விழா நேற்று நடைபெற்றது. திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து அன்று முதல் கிராம பொது மக்களால் தினந்தோறும் மண்டகப்படிகார்கல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அரசடிப்பட்டி அருட்திரு பங்கு தந்தை பபியான் தலைமையில் சிறப்பு நவநாள் பூஜையும் ஆராதனையும் நடைபெற்று வந்தன.

    9 ஆம் நாள் இரவு கிராம பொது மக்க ளால் மேளதாளத்துடன் வான வெடிகள் முழங்க தேர்த்திரு விழா நடைபெற்றது. திருவிழாவிற்கு முன்னாள் பங்குதந்தை சவேரியார், அரசடிப்பட்டி பங்குத்தந்தை பாபியான் கலந்து கொண்டனர்.

    ×