என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசுப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
- அரசுப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற உள்ளது.
- 4 இடங்களில் நடைபெறுகிறது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இன்று 4 இடங்களில் தொடங்கி அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவதற்காக தமிழக அரசு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது.
இதன் மூலம் புதுக்கோட்ைட மாவட்டத்தில் நிகழாண்டு 19 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், 5 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், மற்றும் ஒருவர் அரசு கல்லூரியில் பி.டி.எஸ், 8 பேர் தனியார் கல்லூரிகளில் பி.டி.எஸ். பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் உள் இட ஒதுக்கீட்டில் இல்லாமல் சிறப்பு பிரிவில் ஒரு மாணவிக்கு அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ், சீட் கிடைத்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொததம் 34 பேருக்கு மருத்துவம் பயில் சீட் கிடைத்தள்ளதால் மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. அதன் பிறம் அடுத்தடுத்த கலந்தாய்வுகளில் சிலருக்கு மருத்துவ சீட் கிடைத்தது. இதுவரை இல்லாத அளவுக்கு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ சீட் கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிகழாண்டு மாவட்டத்தில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலுப்பூர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நீட்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து கல்வித்துறை அலுவலர் கூறியாவது :
கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. அற்கு முன்பு சில தொழில்நுட்ப வசதிகள் உள்ள பள்ளிகளில் மட்டும் காணொலி வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழாண்டு தமிழகத்திலேயே சேலத்துக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்த்தில் தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதாக 4 இடங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்று (22-ந்தேதி) தொடங்கி வருகிற ஜூலை 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 850 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றனர்.






