என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • அன்னதானம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி புதுக்கோட்டை சாலை ஓரமாக அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக திருவிழா விமர்சையாக நடைபெற்றது. யாகசாலை அமைக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கருடபகவான் வலம் வந்து கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.

    இவ் விழாவில் 1000 கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புனித நீரானது வருகைதந்த பொதுமக்களின் மேல் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் நடை பெற்றது. 

    • சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு வேந் தையன் கோவில் அருகே சட்ட விரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ேபாலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த மணல் ஏற்றி வந்த 6 மாட்டுவண்டிகளை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில்ஒ ரத்தநாடு தாலுகா நெய்வேலி வடக்கு தெருவைச் சேர்ந்த சின்னையா மகன் பழனி, சிவவிடுதி சின்னையா மகன் ரெங்கராஜ், இடையா த்தி வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் ரெங்கசாமி, கோவிந்தன் மகன் சிதம்பரம், இடையாத்தி வடக்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் முத்துசாமி, வேம்பு மகன் மாரியப்பன் ஆகியோர் என தெரியவந்தது.

    இதனை தெடர்ந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து பழனி, ரெங்கரா ஜ், ரெங்கசாமி, சிதம்பரம், மாரியப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். முத்துசாமி மீது கரம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் யோகரத்தின ம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஆசிரியரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யகோரி வலியுறுத்தப்பட்டது.
    • மாணவரின் தலையில் காயம் ஏற்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.களபம் அரசு தொடக்கப் பள்ளியில் மொத்தம் 39 மாணவ, மாணவிகள் பயின்று வருன்றனர். 40 ஆண்டுகள் பழமையான இப்பள்ளிகட்டிடத்தில் ஆங்காங்கே வி ரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மேற்கூரையின் உள்பகுதியில் சிமென்ட்பூச் பசு பெயர்ந்து விழுந்ததால், 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.20 லட்சத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை அலுவலர்கள் வழியாகவும், நேரடியாகவும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

    இந்நிலையில் கடந்த 21-ந் தேதி பள்ளியின் மேற்கூறை இடிந்து விழுந்தது. இதில் 4-ம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் பரத் காயங்களுடன் உயிர்தப்பினார். இதில் மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக, பள்ளியில் கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி பள்ளித் தலைமை ஆசிரியர் மகாலட்சுமியை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    பள்ளிக்க ட்டிடம் பலவீனமாக இருந்ததற்கு தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் குமரேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மா நில பொதுச்செயலாளர் ரங்கராஜன், தமிழ்நாடு ஆசிரியர் முனேற்ற சங்கத்தின் மணிகண்டன் ஆகியோர் வலிறுத்தியுள்ளனர்.

    • அருங்காட்சியகத்துடன் ராஜகோபால தொண்டைமான் நினைவு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
    • நூற்றாண்டு விழா 4 நாட்கள் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து முதல் நாளான நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ராஜா ராஜகோபால தொண்டைமானின் சிலைக்கு, கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பின் அமைச்சர் ரகுபதி கூறுகையில்,

    மன்னர் தனது பதவிக்காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். கருணாநிதி புதுக்கோட்டையை 1974-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைத்திட ராஜகோபால தொண்டைமான் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொக்கைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.

    அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னர் அவர்களின் திருவுருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.

    புதுக்கோட்டை நகரில் ராஜகோபால தொண்டைமான் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைப்படும் என்று அறிவித்துள்ள முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் மன்னரின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மண்டபம் விரைவில் அமைக்கப்படும் .

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • ராஜேந்திரன் கவுண்டர் தோட்டம் என்ற இடத்தில் வந்தபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
    • இந்த விபத்தில் ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கவுதமன் (வயது 20), பிரவீன் (24) மற்றும் சூர்யபிரகாஷ் (24).

    இவர்கள் மூன்று பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் கொடும்பாளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வரும் திருவிழாவை பார்ப்பதற்காக நேற்று இரவு புறப்பட்டனர்.

    அதேபோல் கொடும்பாளூரை சேர்ந்த டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் ரெங்கசாமி (45), வடகாட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (25) இருவரும் கொடும்பாளூரில் இருந்து மூவர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ராஜேந்திரன் கவுண்டர் தோட்டம் என்ற இடத்தில் வந்தபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கவுதமன் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்த நடுரோட்டில் உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் செல்லும் வழியிலேயே கவுதமன் இறந்தார். மற்ற இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தில் பலியான மூன்று பேரின் உடல்களும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த கோர விபத்து குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவிழாவுக்கு சென்ற 3 பேர் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா இன்று முதல் 4 நாட்களுக்கு நடக்கிறது
    • மாமன்னர் திருவுருவப்பட ஊர்வலம், கவியரங்கம், கண்காட்சி, நாட்டியஅரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சுழலும் பாட்டரங்கம் நடைப்பெறுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ஸ்ரீ பிரஹதாம்பாள்தாஸ் எச்.எச்.ஆர். ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.

    இந்நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுகரசர், எம்.எம்.அப்துல்லா,

    சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்துராஜா, சின்னத்துரை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தொழிலதிபர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

    மாமன்னர் திருவுருவப்பட ஊர்வலம், கவியரங்கம், கண்காட்சி, நாட்டியஅரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சுழலும் பாட்டரங்கம் நடைபெறுகிறது. விழாவில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர், தஞ்சை மன்னர் குடும்பத்தினர் கலந்துக் கொண்டு சிறப்பிக்கின்றனர். விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சிகள், மதிய விருந்துகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாக்குழுவினர் செயலாளர் வல்லத்திராக்கோட்டை சம்பத்குமார், பொருளாளர் கருப்பையா, துணைத்தலைவர் சந்திரசேகரன், இணைச் செயலாளர்கள் பாரதி, ரவிச்சந்திரன், மலர் பொறுப்பாளர் தங்கம்மூர்த்தி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மன்னருக்கு அருட்காட்சியகத்துடன் மணிமண்டபம் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்ததற்கு ராணி சாருபாலா தொண்டைமான் மற்றும் விழாக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • அறந்தாங்கி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.
    • இதில் உண்டியலில் ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 954-மும், 128 கிராம் தங்கமும், 170 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதில் உண்டியலில் ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 954-மும், 128 கிராம் தங்கமும், 170 கிராம் வெள்ளியும் கிடைத்தது. இந்த பணியில் உதவி ஆணையர் அனிதா, ஆய்வாளர் புவனேஸ்வரி, செயல் அலுவலர் முத்துகுமரன் கோவில் பணியாளர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு பேரணி கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது.
    • பேரணியில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகள் கலைக்குழுவினர் மூலம் ஆடல், பாடல் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டையில் வருவாய்த்துறை சார்பில் கள்ளச் சாராயத்திற்க்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    விழிப்புணர்வு பேரணிக்கு புதுக்கோட்டை கோட்ட கலால் ஆணையர் கண்ணகருப்பையா தலைமை தாங்கினார்.கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன் முன்னிலை வகித்தார்.

    விழிப்புணர்வு பேரணி கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது.

    விழிப்புணர்வு பேரணியில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகள் கலைக்குழுவினர் மூலம் ஆடல், பாடல் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு பேரணியில் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடியில் கல்லச்சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கள்ளச்சாரயத்தை ஒழிப்போம் என்ற வாசகத்துடன், கள்ளச்சாராயம் காய்ச்சி குடிப்பது பெரு அவமானம் என பேனர்கள் கையில் ஏந்தியபடிக்பேரணி நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு ஆணைக்கிணங்க கள்ளசாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. பேரணிக்கு ஆலங்குடி தாசில்ல்தார் செந்தில்நாயகி தலைமை வகித்தார்.

    விழிப்புணர்வு பேரணி தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி அரசமரம்,வடகாடுமுக்கம், காமராஜர்சிலை, பழைய நீதிமன்ற வளாகம் ஆகிய வழியாக மீண்டும் தாலுகா அலுவலகம் வந்தடைந்தது.

    புதுக்கோட்டை கலால் தனி வட்டாட்சியர் கண்ணாகருப்பையா ஆலங்குடி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் ஆலங்குடி தாசில்தார் பஸ் ஸ்டாண்டில் நின்ற பேருந்துகளிடம் ஏறி கள்ளச்சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

    கள்ளச்சாராயத்துக்கு எதிரான தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழக்கத்தோடு ஒழிப்போம் ஒழிப்போம் கள்ளச்சாரயத்தை ஒழிப்போம் என்ற வாசகத்துடன், கள்ளச்சாராயம் காய்ச்சி குடிப்பது பெரு அவமானம் என பேனர்கள் கையில் ஏந்தியபடிக்பேரணி நடைபெற்றது.

    பேரணியில் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வடகாடு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • இதைத்தொடர்ந்து, விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 6.5 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வடகாடு, காகித ஆலைச்சாலை, புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் உள்ள 3 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை நடைபெற்றது தெரியவந்துள்ளது

    இதைத்தொடர்ந்து, விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 6.5 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடகாடு செட்டியார்தெருவைச் சேர்ந்த சக்திவேல் (வயது 29) வடகாடு பரமநகரைச் சேர்ந்த வீராச்சாமி (70), கரம்பக்காடு பகுதியைச்சேர்ந்த செந்தில்குமார் (33) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீஸார் பிடித்து வந்து வடகாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சர்வதேச யோகா தின நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, மற்றும் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா செய்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆடல், பாடல், விழாக்கள செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீரடிபட்டி குடியிருப்பில் செயல்பட்டு வரும்

    இல்லம் தேடி கல்வி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச யோகா தின நிகழ்வில் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு, மற்றும் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா செய்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    இதேபோல அம்மா புதுப்பட்டி, மருங்கூரணி, ராசா பட்டி, வடுகப்பட்டி மல்லிகை நத்தம், மஞ்ச பேட்டை, மங்கனூர், வலச்சேரிப்பட்டிஆகிய இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு சர்வதேச யோகா தினம் குறித்த விழிப்புணர்வும், பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
    • புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (41)ராப்பூசல் சேர்ந்த பன்னீர்செல்வம் (48) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கிறார்கள்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இலுப்பூர் மேட்டு சாலை பகுதியில் தனியார் பேக்கரி முன்பாக நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்டதில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட 4.273 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை இலுப்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குட்கா கடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (41)ராப்பூசல் சேர்ந்த பன்னீர்செல்வம் (48) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தில் இருந்து இலுப்பூர் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    ×