அருங்காட்சியகத்துடன் ராஜகோபால தொண்டைமான் நினைவு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் - அமைச்சர் தகவல்

அருங்காட்சியகத்துடன் ராஜகோபால தொண்டைமான் நினைவு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். நூற்றாண்டு விழா 4 நாட்கள் நடைபெறுகிறது
அருங்காட்சியகத்துடன் ராஜகோபால தொண்டைமான்  நினைவு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் - அமைச்சர் தகவல்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து முதல் நாளான நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ராஜா ராஜகோபால தொண்டைமானின் சிலைக்கு, கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் அமைச்சர் ரகுபதி கூறுகையில்,

மன்னர் தனது பதவிக்காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். கருணாநிதி புதுக்கோட்டையை 1974-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைத்திட ராஜகோபால தொண்டைமான் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொக்கைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.

அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னர் அவர்களின் திருவுருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.

புதுக்கோட்டை நகரில் ராஜகோபால தொண்டைமான் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைப்படும் என்று அறிவித்துள்ள முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் மன்னரின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மண்டபம் விரைவில் அமைக்கப்படும் .

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com