என் மலர்
புதுக்கோட்டை
- மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று என்னை அழைக்க வேண்டாம்.
- கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான்.
புதுக்கோட்டை தி.மு.க. சார்பில் உசிலங்குளம் தடி கொண்ட அய்யனார் திடலில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். இந்தியாவிலேயே 3-வதாக பெரிய இயக்கமாக தி.மு.க. உள்ளது. கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும், மூத்த நிர்வாகிகளையும் அண்ணா, பெரியாரின் மறு உருவமாக நான் பார்க்கிறேன்.
கட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். என் மீது பாசம், அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும் போது 3-ம் கலைஞர், இளம் தலைவர் என அப்படியெல்லாம் அழைக்கிறீர்கள். எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் கிடையாது.
கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான். என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது. பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான். இந்த திடலில் இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பேசிய இந்திரா காந்தி பிரதமரானார், கருணாநிதி பல வெற்றிகளை கண்டுள்ளார், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார்.
இந்த திடல் ராசியான திடல் என்று எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள். எனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பின் மீது நம்பிக்கை உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இசைக்கலைஞர் பரிதாபமாக இறந்தார்.
- சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
புதுக்கோட்டை:
ஆதனக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 38). இவர் இசை நிகழ்ச்சிகளில் இசைக்கருவியை வாசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஆதனக்கோட்டையிலிருந்து கல்லுக்காரன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் பீதியடைந்த டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆதனக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்."
- கியாஸ் கசிவால் வீடு எரிந்து நாசமானது.
- பொருட்கள் எரிந்தது
புதுக்கோட்டை:
ஆவுடையார்கோவில் அருகே உள்ள குட்டி புளிஞ்சியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய ஆஸ்பெட்டாஸ் வீட்டில் கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
இதில், மளமளவென தீ பரவியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவுடையார் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த விபத்தில் ஆஸ்பெட்டாஸ் வீடு மற்றும் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
கல்லா லங்குடி தேசிய ஆயுஷ் குழுமம் மற்றும் இந்திய மருத்துவம் ஓமியோ பதி துறை திருவரங்குளம் வட்டார ம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் கல்லாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வளா கத்தில் நடைபெற்றது. முகாமில் கல்லாலங்குடி ஊராட்சி மன்றதலவர் மலர் பழனிசாமி துவக்கி வைத்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் மூட்டுவலி இடுப்பு வலி தோல் நோய்கள் சர்க்க ரை நோய் மூலம் ஆகியவற்றுக்கு சிகி ச்சை அளிக்கப்பட்டது.
திருவரங்குளம் அரசு சித்த மருத்துவர் டாக்டர் ரெங்கநாயகி மற்றும் ஆலங்குடி சித்த மருத்துவர் டாக்டர் மணிவண்ணன் ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கல்லாலங்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் விமலா அறிவழகன் வார்டு உறுப்பினர்கள் கமல் மணிமேகலை ஊராட்சி செயலர் ஜெனித் அரிஸ்டாட் டில் என சுமார் 200 க்கும் அதிக மானோர் பயனடைந்தனர்.
- எஸ்.ஐ. பணி எழுத்துத்தேர்வில் 3348 பேர் பங்கேற்றனர்
- புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
புதுக்கோட்டை :
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தமிழக காவல் துறைக்கு 444 சப்- இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு பல்வேறு மையங்களில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி,அரசமலையில் உள்ள தனியார் கல்லூரி ஆகிய 2 இடங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
இதில் 2,879 ஆண்கள், 1,153 பெண்கள் என 4,032 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 684 பேர் பங்கேற்காததால் 3,348 பேர் தேர்வெழுதினர். அரசமலை தனியார் தேர்வு மையத்தில் மத்திய மண்டல ஜ.ஜி. சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார்.
- சுயஉதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களை பொதுமக்கள் வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
- துவக்கி வைத்து பார்வையிட்டார்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை நகராட்சி காந்தி பூங்காவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், வரும் 30-ந் தேதி வரை நடைபெறும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் கூறுகையில்,
இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயார் செய்யப்பட்ட குந்தன்ஜுவல்லரி, டெரகோட்டா பொம்மைகள், வத்தல் வடகம், செட்டிநாடு ஊறுகாய் ரெடிமேட் ரகங்கள், மண்புழு உரம், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்களினாலான மதிப்புக் கூட்டப்பட்ட உணவு பண்டங்கள், நர்சரி செடிகள் பழ மரக்கன்றுகள், அழகிய
ரோஜாப்பூ செடிகள், ஆரி ஒர்க், இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட மரச்செக்கு எண்ணெய் வகைகள், செட்டிநாட்டு தின்பண்டங்கள், தஞ்சாவூர் பிக்சர் பெயிண்டிங், ஆசோலா போன்ற பல்வேறுபட்ட விதவிதமான சுய உதவிக்குழு பொருட்களின் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் மகளிர்சுய உதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டு, பொருட்களை வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , புதுக்கோட்டை நகரமன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சி ஆணையர் நாகராஜன், உதவி திட்ட அலுவலர் ராஜாமுகமது மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- 133 மாணவ, மாணவியர்கள் சேர்ந்து 1330 குறள்கள் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தமிழ் வளர்ச்சித்துறைக்கு அனுப்பப்படவுள்ளது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவண–த்தாங்கோட்டை மேற்கு நடுநிலைப்பள்ளியில் ஒரே நேரத்தில் 133 மாணவ, மாணவியர்கள் சேர்ந்து 1330 குறள்கள் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2022-23ம் கல்வி ஆண்டை தமிழோடுவரவே–ற்கும் விதமாக குறள் தொடுப்போம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவ மாணவியர்களுக்கு தமிழ் மொழியின் முக்கிய–த்துவம் குறித்தும், திருக்குறள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்த நிகழ்ச்சியில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஒரு மாணவருக்குஒரு அதிகாரம் வீதம் திருக்குற–ளில் உள்ள 1330 பாடல்களை 133 மாணவ மாணவிகள் சேர்ந்து 3 நிமிடத்தில் எழுதி முடித்தனர். மாணவ மாணவியர்கள் எழுதிய திருக்குறள்களை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறைக்கு அனுப்பப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கலை–ச்செல்வி, ஆங்கிலபட்ட–தாரி ஆசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.
- 23 விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது
- ஆவின் கூட்டுறவுசொசை–யிட்டி இணைந்து நடத்தினர்.
புதுக்கோட்டை:
இந்தியாவின் மூன்றாவது பெரிய தேசிய வங்கியான பாங்க் ஆப் பரோடாவின் கறவை மாடுகள் விவசாயிகள் வாங்குவதற்கான கடன் உதவி திருவிழா நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியினை பாங்க் ஆப் பரோடா வங்கி துவக்கியுள்ளது.
இதனடிப்படையில் புதுக்கோட்டை பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் கூட்டுறவுசொசை–யிட்டி இணைந்து இவ்வி–ழாவை நடத்தினர்.
விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் கூட்டுறவு சொசையிட்டியின் மேலாளர் டாக்டர் ஈஸ்வரி கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இதில் 10 ஆவின் பால் சொசைட்டி–களின் தலைவர்மற்றும் செய–லாளர்கள்கலந்துக் கொண்டு தங்களது சந்தேக–ங்களை கேட்டறிந்தார்.
மேலும் புதுக்கோட்டை பாங்க் ஆப் பரோடா வங்கி கிளை மேலாளர் தனுசியா, அறந்தாங்கி கிளை மேலா–ளர் கௌரிசங்கர், கெப்பனாம்பட்டி வங்கி கிளை மேலாளர் செந்தில் மற்றும் விவசாய அதிகாரி ஐஸ்வர்யா ஆகியோர் இணைந்து 23 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்திற்கான கடன் நியமன ஆணைகளை வழங்கினர்.
- எலிமருந்து தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள இலைகடிவிடுதி நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. இவரது மகள் மகாலட்சுமி (வயது 22). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் மகாலட்சுமி நேற்று எலிமருந்தை (விஷம்) சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்இ தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மகாலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி சப் இன்ஸ்பெக்டர் பழனிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ரூ.12 லட்சம் பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- தலைமறைவான அசோக்கை தேடி வருகின்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், காமராஜபுரம் 34-ம் வீதியைச் சேர்ந்தவர் ஞானபாக்கியராஜ். இவர், சிங்கப்பூரில் உள்ள ஷாஜகானிடம் பணிபுரிந்து வருகிறார். இவர், சிங்கப்பூரிலிருந்து ஷாஜகான் அனுப்பும் பணத்தை தமிழகத்தில் உள்ள நபர்களிடம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருருதார்.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி புதுக்கோட்டையிலிருந்து தேவகோட்டைக்கு பணத்தை விநியோகம் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருமயம் அருகே கொசப்பட்டி பகுதியில் ஞானபாக்கியரா ஜை பின்தொடர்ந்து சென்ற 2 பேர், தங்களை ஊழல் தடுப்பு போலீஸார் என்று கூறி, அவரிடம் இருந்த ரூ.12 லட்சத்தை பறித்துச் செனறுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருமயம் போலீஸார் விசாரித்ததில், ஆ லங்குடி அருகே உள்ள கீழ கரும்பிரான்கோட்டையைச் சேர்ந்த சரவணன்(வயது,38), எலி (எ) பாலமுருகன்34), கல்லாலங்குடியைச் சேர்ந்த அசோக் ஆகியோர் கூட்டுச்சேர்ந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சரவணன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அசோக்கை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- குடிநீர் பிரச்சனைக்கு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
- பணிகள் நடைபெற்றவருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமானின் திருஉருவ சிலைக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துைற அமைச்சர் கே.என்.நேரு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, தமிழகத்தில் பத்தாண்டு காலமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அப்போதைய அரசு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.இந்த ஆண்டும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அவசர பணிகள் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவது தெரிகிறது. இருந்த போதிலும் தமிழக அரசு மிகப்பெரிய நிதி சுமையில் உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி சுமை சீரானதும் அது பற்றி பரிசீலனை செய்து தேவையான இடங்களில் பணியாளர் நிரப்பப்படும். இதற்கிடையில் தேவையான இடங்களில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கருத்துரிமை கோரப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
புதுக்கோட்டையில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில் 122 ேகாடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பணிகள் நடைபெற்றவருகிறது. புதுக்கோட்டை நகரின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 690 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு நடைபெற்றது.
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி எவரெஸ்ட் மஹாலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் 6-வது ஒன்றிய மாநாடு மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் சுசீலா, மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய மாநாட்டில் புதிய ஒன்றியக்குழு தேர்வு செய்தல் மாவட்ட மாநாடு பிரதிநிதி தேர்வு செய்தல், குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுப்பது குறித்தும், 100 நாள் வேலைகளில் ஆன் லைன் போட்டோ எடுப்பதை தடுத்து நிறுத்த கோரியும், பெட்ரோல், டீசல், கேஸ் விலையை கட்டுப்படுத்த கோரியும்
மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் இளவரசி, எஸ்எப்ஐ சுருதி, மாவட்டச் செயலாளர் சலோமி உமாராணி, ரஷ்யா காசாம்பூ, பிரியதர்ஷினி, நித்தியா இளமாறன், மாரியம்மாள், கோமதி, மாதவி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.






