search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CENTENNIAL CELEBARATION"

    • புதுக்கோட்டை மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா இன்று முதல் 4 நாட்களுக்கு நடக்கிறது
    • மாமன்னர் திருவுருவப்பட ஊர்வலம், கவியரங்கம், கண்காட்சி, நாட்டியஅரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சுழலும் பாட்டரங்கம் நடைப்பெறுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ஸ்ரீ பிரஹதாம்பாள்தாஸ் எச்.எச்.ஆர். ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.

    இந்நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுகரசர், எம்.எம்.அப்துல்லா,

    சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்துராஜா, சின்னத்துரை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தொழிலதிபர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

    மாமன்னர் திருவுருவப்பட ஊர்வலம், கவியரங்கம், கண்காட்சி, நாட்டியஅரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சுழலும் பாட்டரங்கம் நடைபெறுகிறது. விழாவில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர், தஞ்சை மன்னர் குடும்பத்தினர் கலந்துக் கொண்டு சிறப்பிக்கின்றனர். விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சிகள், மதிய விருந்துகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாக்குழுவினர் செயலாளர் வல்லத்திராக்கோட்டை சம்பத்குமார், பொருளாளர் கருப்பையா, துணைத்தலைவர் சந்திரசேகரன், இணைச் செயலாளர்கள் பாரதி, ரவிச்சந்திரன், மலர் பொறுப்பாளர் தங்கம்மூர்த்தி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மன்னருக்கு அருட்காட்சியகத்துடன் மணிமண்டபம் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்ததற்கு ராணி சாருபாலா தொண்டைமான் மற்றும் விழாக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    ×