என் மலர்
புதுக்கோட்டை
- மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் நடந்தது
- காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 474.83 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 150.60 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்படவுள்ளது.
இதில் 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2013 -ம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்படுகிறது.அதன்படி தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் குன்னத்தூர், புலியூர், வத்தனாகுறிச்சி, வாலியம்பட்டி, சீமானூர் மற்றும் பூங்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் இதுவரை 6 கட்டங்களாக 43.19 ஹெக்டேர் நிலங்கள் ரூ.44.15 கோடி மதிப்பிற்கு கைய கப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கிராமத்தில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர் மற்றும் வத்தனாக்குறிச்சி கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள 25 குடும்பங்களுக்கு மறு குடியமர்வுக்கு வழி செய்யும் வகையில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, கோட்டாட்சியர் அறிக்கை பெறப்பட்டு மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
மேலும் மேற்கண்ட காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது
- விலையில்லா சலவைப் பெட்டிகளை வழங்கினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 280 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4,871 மதிப்பீட்டில் விலையில்லா சலவைப் பெட்டிகளை கலெக்டார் கவிதா ராமு வழங்கினார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் நடந்தது
- அம்பேத்கர் படம் சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே உள்ள புதுவளசல் கிராமத்தில் அம்பேத்கர் படத்துடன் விடுதலை சிறுத்தை கட்சி பெயர் பலகையும் அம்பேத்கார் படத்துடன் கூடிய தனியார் கல்வி நிறுவனத்தின் பெயர் பலகையும் உள்ளது.
இந்நிலையில் அம்பேத்கர் படம் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பெ யர் பலகைகளையும் அவ்வப்போது மர்ம நபர்கள் கிழித்து சேதப்படு த்துவது தொடர் கதையாகி வரக்கூடிய நிலையில், கடந்த 27ம் தேதி இதுபோன்ற சம்பவத்தை கண்டித்து அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் இது போன்ற சம்பவம் அரங்கேராது என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் புதுவளசல் கிராமத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பெயர் பலகையில் உள்ள அம்பேத்கர் படத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள், கட்சி கொடியையும் அறுத்து சேதப் படுத்தி உள்ளனர், அதேபோல் அம்பேத்கர் படம் இடம் பெற்ற தனியார் கல்வி நிறுவன பெயர் பலகையை சாய்த்துள்ளனர்.
இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அம்பேத்கர் படத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கோரி, புதுப்பட்டி-ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு கறம்பக்குடி வட்டாட் சியர் ராமசாமி மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இனிமேல் இது போன்ற சம்பவம் தொடராமல் இருக்க தகுந்த நடவடி க்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள இலைகடிவிடுதி ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள சிமெண்டு சாலை குறுகலான நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைத்து கால்வாய்வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளுக்கு மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100கும் மேற்பட் டோர், கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டியில் புதுக்கோட்டை- கறம்பக்குடி பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகலறிந்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முப்பெரும் விழா நடந்தது
- 14 வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14 வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செயல் வீரர்களுக்கான பயிற்சி முகாம் என முப்பெரும் நிகழ்ச்சி நகர செயலாளர் அப்துல்ரஜாக் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கட்சியின் மாவட்ட தலைவர் சலாவுதீன், மாவட்ட செயலாளர் மற்றும் செரியலூர் இனம் ஊராட்சி மன்ற தலைவர் ஜியாவுதீன், ஆலங்குடி தொகுதி துணை தலைவர் ஜமால் முகமது, நகர தலைவர் முகமது முகையதீன், கிளை தலைவர் பீர்முகமது மற்றும் கட்சியின் நகர கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- மாரியம்மன் கோவில் முத்து பல்லாக்கு நடைபெற்றது
- பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் முத்து பல்லாக்கு விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி, உடம்பில் அழகு குத்தியும் கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து பூத்தட்டு எடுத்து வந்து வழிபட்டு சென்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, முத்து பல்லாக்கில் அம்மன் திருவீதி உலா அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது.விழாவை முன்னிட்டு அம்மன் கருவறை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை மண்டக படித்தார்கள், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- அன்னவாசல் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
மாத்தூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாத்தூர் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல், அன்னவாசல் பேருராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரிக்கு கனிம வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்
- இதுவரை அந்த குவாரியில் 50 முதல் 70 அடிக்கு பாறைகள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், திருமயம், நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சில குவாரிகள் சட்ட விரோதமாக விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
குறிப்பாக இந்த குவாரிகளால் விளைநிலங்கள் மற்றும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நார்த்தாமலை அருகில் உள்ள நெடும்பாறை பகுதியில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக குவாரி ஒன்று இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
மேலும் அந்த குவாரியில் இரவு, பகல் பாராமல் எந்தநேரமும் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பகலில் கூட வெளியிட நடமாட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இதையடுத்து நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் புகார் கூறப்பட்ட கல் குவாரிக்கு அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பாறைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டிந்த நபர்கள் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.
தொடர்ந்து பாறைகளை அகற்ற வைத்திருந்த ஹிட்டாச்சி எந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுவரை அந்த குவாரியில் 50 முதல் 70 அடிக்கு பாறைகள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
கனிமவளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, குளத்தூர் தாசில்தார் சக்திவேல் ஆகியோர் குவாரியை பார்வையிட்டு தலைமறைவான நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த குவாரிக்கு அருகாமையில் தான் போலீசாரின் துப்பாக்கி சுடும் மையம் செயல்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து பாய்ந்து வந்த தோட்டா சிறுவன் உடலில் பாய்ந்து உயரிழந்தான். இதையடுத்து அந்த துப்பாக்கி சுடும் மையம் மூடப்பட்டது.
தற்போது பல மாதங்களாக புகார் கொடுத்தும் மூடப்படாத சட்டவிரோத குவாரியை அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழிலக துறை கட்டுப்பாட்டில் இந்த பகுதிக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தாதது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் இயங்கும் குவாரிகள் முறையாக அனுமதி பெறப்பட்டதா, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதா என இனியாவது அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொன்னமராவதி அருகே அரிய வகை நாய் ஒரே நேரத்தில் 9 குட்டிகளை ஈன்று சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது
- இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் குழுவினர் ஜாய் மற்றும் அதன் வளர்ப்பாளர் ஹரிஷ் பெயரை பதிவு செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள நாட்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ். பொறியியல் பட்டதாரியான இவர் தனது வீட்டில் செல்ல பிராணியாக நேபாள மாநிலத்தை சேர்ந்த லசாப்சோ வகை நாய் ஒன்றை ஜாய் என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.
இந்த வகை லசாப்சோ நாய் ஒரே நேரத்தில் மூன்றிலிருந்து ஐந்து குட்டிகள் வரையே ஈன்றும் நிலையில் ஹரிஷ் வளர்த்த நாய் ஒரே நேரத்தில் 9 குட்டிகளை ஈன்றுள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஹரிஷ் இது குறித்து இணையத்தில் படித்த போது ஏற்கனவே லசாப்சோ வகை நாய் இதுவரை மூன்றில் இருந்து ஐந்து குட்டிகளை மட்டுமே ஈன்றுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து உலகத்திலேயே ஹரிஷ், தான் வளர்த்த நாய் ஒன்பது குட்டிகளை ஈன்றாதால் ஹரிஷ் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார்.
அதன் உண்மை தன்மையை அறிந்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் குழுவினர் ஜாய் மற்றும் அதன் வளர்ப்பாளர் ஹரிஷ் பெயரை பதிவு செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
- மணி தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- திருஷ்டிக்காக சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்கப்பட்டு கிடந்ததால் விபத்து நேரிட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 45). இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கீழ 4-ம் வீதியில் சாலையில் உடைக்கப்பட்டு கிடந்த பூசணிக்காயின் மீது மோட்டார் சைக்கிள் ஏறியதில் நிலைக்குலைந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கீழே விழுந்ததில் லேசான காயமடைந்தனர். காயமடைந்த தம்பதி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினர்.
திருஷ்டிக்காக சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்கப்பட்டு கிடந்ததால் விபத்து நேரிட்டது தெரியவந்தது.
விபத்து ஏற்படும் வகையில் சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
- ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் நடை பெற்றது.
- இதில் பொதுமக்கள் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் ஆகிய சேவை வேண்டி மனு அளித்தனர்.
புதுக்கோட்டை :
ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியர் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி பெரியநாயகி தலைமையில் குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் நடை பெற்றது.
வட்டாட்சியர் குடிமை பொருள் வழங்கள்முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் தனி வருவாய் ஆய்வாளர் கணேசன் இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுமக்கள் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை அங்கீகாரச் சான்று ரேஷன் ன் கடைகள் குறித்து புகார், மொபைல் மாற்றம் மற்றும் இதர சேவை கள் குறித்த மனுக்கள் ஆகிய சேவைகளை வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
- புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு பிணமாக கிடந்தார்.
- பிணமாக கிடந்தவர் கொசளக்குடியை சேர்ந்த காசிராஜன் (வயது 31) என தெரியவந்தது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாக கிடந்தவர் கொசளக்குடியை சேர்ந்த காசிராஜன் (வயது 31) என தெரியவந்தது. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






