என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 PUPPIES BIRTH"

    • பொன்னமராவதி அருகே அரிய வகை நாய் ஒரே நேரத்தில் 9 குட்டிகளை ஈன்று சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது
    • இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் குழுவினர் ஜாய் மற்றும் அதன் வளர்ப்பாளர் ஹரிஷ் பெயரை பதிவு செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள நாட்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ். பொறியியல் பட்டதாரியான இவர் தனது வீட்டில் செல்ல பிராணியாக நேபாள மாநிலத்தை சேர்ந்த லசாப்சோ வகை நாய் ஒன்றை ஜாய் என்று பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.

    இந்த வகை லசாப்சோ நாய் ஒரே நேரத்தில் மூன்றிலிருந்து ஐந்து குட்டிகள் வரையே ஈன்றும் நிலையில் ஹரிஷ் வளர்த்த நாய் ஒரே நேரத்தில் 9 குட்டிகளை ஈன்றுள்ளது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ஹரிஷ் இது குறித்து இணையத்தில் படித்த போது ஏற்கனவே லசாப்சோ வகை நாய் இதுவரை மூன்றில் இருந்து ஐந்து குட்டிகளை மட்டுமே ஈன்றுள்ளது தெரிய வந்தது.

    இதையடுத்து உலகத்திலேயே ஹரிஷ், தான் வளர்த்த நாய் ஒன்பது குட்டிகளை ஈன்றாதால் ஹரிஷ் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார்.

    அதன் உண்மை தன்மையை அறிந்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் குழுவினர் ஜாய் மற்றும் அதன் வளர்ப்பாளர் ஹரிஷ் பெயரை பதிவு செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

    ×