என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புதுக்கோட்டையில் சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காயால் விபத்து: தம்பதி காயம்
  X

  புதுக்கோட்டையில் சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காயால் விபத்து: தம்பதி காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணி தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • திருஷ்டிக்காக சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்கப்பட்டு கிடந்ததால் விபத்து நேரிட்டது.

  புதுக்கோட்டை

  புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 45). இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது கீழ 4-ம் வீதியில் சாலையில் உடைக்கப்பட்டு கிடந்த பூசணிக்காயின் மீது மோட்டார் சைக்கிள் ஏறியதில் நிலைக்குலைந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கீழே விழுந்ததில் லேசான காயமடைந்தனர். காயமடைந்த தம்பதி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பினர்.

  திருஷ்டிக்காக சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்கப்பட்டு கிடந்ததால் விபத்து நேரிட்டது தெரியவந்தது.

  விபத்து ஏற்படும் வகையில் சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

  Next Story
  ×