என் மலர்
புதுக்கோட்டை
- வாகன விபத்தில் வக்கீல் உட்பட 2 பேர் காயம் ஏற்பட்டது
- காரில் சென்ற போது ஏற்பட்ட சம்பவம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ளே சிக்கப்பட்டியை சேர்ந்த குமரேசன் மகன் கன்ராக் (எ) கணேசன் (வயது 31) அரசு வக்கீல். இவர் நேற்று புதுக்கோட்டை நீதிமன்றம் சென்று விட்டு மீண்டும் ஆலங்குடி நோக்கி நண்பர்கள் இருவருடன் காரில் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியும், கணேசன் ஓட்டி சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கணேசன் படுகாயமடைந்தார். இதற்கிடையே அந்த வழியாக கீழக் கரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் மகன் சந்தோஷ் (19) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் அவரும் படுகாயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 600 கிலோ ரேசன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
- வாகனத்துடன் அரியை பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினரின் சோதனையில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 600 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவுபடி சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் போலீசார் , புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 600 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரிசியையும், ஆம்னி வேனையும் பறிமுதல் செய்த போலீசார், வேனை ஓட்டிவந்த கீழாத்துரையை சேர்ந்த ரெத்தினம் மகன் செல்வம் (வயது 59) என்பவரை கைது செய்தனர். கடத்தி வரப்பட்டு எங்கு கொண்டு செல்லப்படுகிறது என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உளுந்து கொள்முதல் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- குறைந்தபட்ச ஆதார விலையில்
புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
புதுக்கோட்டை, நவ.14- தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது உளுந்து விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 170 மெ.டன் உளுந்து மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 160 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உளுந்து கொள்முதல் 29.12.2022 வரை நடைமுறையில் இருக்கும். எனவே இத்திட்டத்தில் உளுந்து விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் உளுந்து கொள்முதலுக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தமிழ்நாடு உளுந்து விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த உளுந்து கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உளுந்து விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது
- புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு தகவல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் தாட்கோ மூலம் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக் கூடாது.
மேலும், இது தொடர்பான விவரங்களை மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, காட்டு புதுகுளம், பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை என்ற முகவரியில் அல்லது தாட்கோ, மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 04322 - 221487 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- வருங்காலத்தில் தமிழகத்தில் நிலைநிறுத்தக்கூடிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- நிறை, குறைகள் இருக்கும் போது நான் உங்களிடம் கண்டிப்பாக கேட்பேன்.
புதுக்கோட்டை
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி வாக்குச்சாவடி பாக நிலை முகவர்களுடன் காணொளி காட்சி மூலம் க லந்துரையாடல் நடத்தினார். இந்த கூட்டம் ஆலங்குடி தனியார் மாகாலில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.டி.தங்கமணி தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட துணைச்செயலாளர் ஞா.இளங்கோவன், தெற்கு ஒன்றிய செயலாளர் அரு வடிவேல், ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக பேசிய மு.க.ஸ்டாலின், வருங்காலத்தில் தமிழகத்தில் நிலைநிறுத்தக்கூடிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் அந்தந்த மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர்த, ஊராட்சி இவைகளில் உள்ள பாக நிலை இரண்டுக்கான நிலைய அலுவலர்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மேலும் வரைவு வாக்காளர் திருத்தப்பட்டியல் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இன்றும் அந்த பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், இறந்தோர் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள பாக நிலை இரண்டில் உள்ள பொறுப்பாளர்கள் உடனடியாக அந்தந்த தேதிகளில் அதற்கு உண்டான படிவங்களை மக்களிடம் வழங்கவேண்டும்.
வேலைகளை துரிதமாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் நீங்கள் தான் ஒருங்கிணைப்பு செய்து கொள்ள வேண்டும். நிறை, குறைகள் இருக்கும் போது நான் உங்களிடம் கண்டிப்பாக கேட்பேன். ஆகையினால் மாவட்ட நிர்வாகம் சொல்லக்கூடிய அறிவுரைகளை கேட்டு அதற்கு உண்டான உபகரணங்களை பெற்றுக் கொண்டு துரித வேலையில் ஈடுபட வேண்டும். வருங்கால தேர்தல் உங்கள் கையில் உள்ளது என்றும் ஆகையினால் வாக்குகளை சேகரிக்கும் பொறுப்பில் தற்போது முதலே நீங்கள் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வாக்குச்சாவடி பாக நிலை 2-ல் உள்ள மாவட்ட, நகர, பேரூர் கழக கட்சி தலைவர்கள், ஒன்றி,ய நகர தலைர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கழக ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் ஏராளமா னோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
- பாண்டிச்செல்வம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.
- விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா ஜெயங்கொண்டாம் ஊராட்சியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (வயது 23). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் 2 வயது முதல் தனது தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். ஐ.டி.ஐ. முடித்து விட்டு அவரது வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் ஆடு, மாடுகள் மேய்த்தும், விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தத்தில் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் இறந்தவரின் தந்தை ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்திற்கு முன்பே தண்ணீர் திறந்துவிட ப்பட்டதால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
- பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை எதிர் வருகின்ற 30ம் தேதி வரை நீட்டித்து தர விவசாயிகள் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் விவசாயிகள் நெர்ப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்திற்கு முன்பே தண்ணீர் திறந்துவிட ப்பட்டதால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் சமீபத்தில் பெய்து வரும் கன மழையால் விவசாயப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் விவசாயிகள் 2022- 23ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி முதல் பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கால அவகாசம் எதிர் வருகின்ற 15ம் தேதியோடு முடிவடைகின்ற நிலையில், பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை எதிர் வருகின்ற 30ம் தேதி வரை நீட்டித்து தர விவசாயிகள் சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கல்லணை க்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ் தமிழக முதல்வரின் தனிப்பி ரிவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்ட கல்லணை க்கால்வாய் பகுதியில் பெருமழை காரணமாக விவசாயப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் எதிர் வருகின்ற 15ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய தாமதமாகி வருகிறது.
எனவே தமிழக முதல்வர் விவசாயி களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு பயிர் காப்பீடு செய்ய எதிர் வருகின்ற 30ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தர சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
- கந்தர்வகோட்டையில் வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம் நடை பெற்றது.
- முகாமில் 18 வயதில் நிறைவடைந்தவர்கள் தங்களின் பெயர்களை சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மற்றும் ஆதார் எண் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்களுக்கான 375 மனுக்கள் முகாம் அலுவலர்களால் பெறப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் 88 வாக்கு சாவடி மையங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
முகாமில் 18 வயதில் நிறைவடைந்தவர்கள் தங்களின் பெயர்களை சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மற்றும் ஆதார் எண் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்களுக்கான 375 மனுக்கள் முகாம் அலுவலர்களால் பெறப்பட்டது.
வாக்கு சாவடி மையங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பாளர் வள்ளலார், கோட்டாட்சியர் செல்வி, புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலர் கருணாகரன், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, தாலுகா தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தனர்.
- கணபதிபுரம் ஊராட்சியில் புதுக்கோட்டை வேர்ல்ட் விஷன் இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டாடும் குடும்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.
- கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூற வேண்டும்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கணபதிபுரம் ஊராட்சியில் புதுக்கோட்டை வேர்ல்ட் விஷன் இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டாடும் குடும்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியினை திட்ட மேலாளர் கிளாடில் ஏற்பாட்டில் கள ஒருங்கிணைப்பாளர் பிரதாப் பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் அனைவருடைய குடும்பங்கள் சிறந்து விளங்கிட பின்பற்ற வேண்டிய குணங்கள், கைவிட வேண்டிய தீய பழக்க வழக்கங்கள், குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய காரியங்கள் என்ன என்றும், கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூற வேண்டும் எனவும், நிகழ்கால எதிர்கால கனவுகள் பற்றிய கருத்துக்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
பயிற்சியில் 42 குடும்பங்களை சேர்ந்த 84 நபர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியிற்கான முன்னேற்பாடுகளை கணபதிபுரத்தை சேர்ந்த மேனகா செந்தில்குமார் செய்திருந்தார்.
- சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
- கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல்லுக்கு பிரிமீயம் தொகையாக ஏக்கருக்கு ரூ.488.05 செலுத்தி பயிர் காப்பீடு செய்து வரும் நிலையில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 15-ந் தேதி ஆகும். தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அனைவரும் தொடர்ந்து பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் நலன் கருதி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர் காப்பீடு செய்யப்படும். இது தவிர மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் பயிர் காப்பீடு பணி மேற்கொள்ளப்படும். எனவே, இதுவரையிலும் காப்பீடு செய்யாத விவசாயிகள் இவ்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிரினை உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ உடனடியாக பயிர் காப்பீடு செய்யலாம். இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
- போலீசை தாக்கிய வாலிபரை கைது செய்தனர்
- இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது31) இவர் அறந்தாங்கி காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளருக்கு ஓட்டுனர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வேலை நிமித்தமாக சென்றுள்ளார். அப்போது சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு கிண்டலடித்துக் கொண்டிருந்துள்ளனர். அதனை பார்த்த கான்ஸ்டபிள் சேகர் அவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்து வாதம் செய்துள்ளனர். இதில் கான்ஸ்டபிள் சேகருக்கும், கும்பலை சேர்ந்த அஜித்குமார் (26) என்பவருக்கும் வாக்குவாதம் மூண்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் அஜித்குமார், சேகரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். அதனை தொடர்ந்து சேகர் அறந்தாங்கி காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த காவல்த்துறையினர், அஜித்குமாரை விசாரித்ததில் அவர்குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது, அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையிலடைத்தனர். காவலரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மினி பஸ் மோதி மாணவன் பலியானார்
- ஆவணம் கை காட்டி சென்ற போது சம்பவம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி ஊராட்சி நல்லாண்டார் கொல்லை கிராமத்தில் வசிப்பவர் அழகர் மகன் ராமகிருஷ்ணன் (வயது 16) இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் ஆவணம் கை காட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இந்நிலையில் எதிரே வந்த தனியார் மினி பஸ் இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராமகிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்து வமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வடகாடு காவல் ஆய்வாளர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






