search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குச்சாவடி பாக நிலை முகவர்களுடன்  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் கலந்துரையாடல்
    X

    வாக்குச்சாவடி பாக நிலை முகவர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் கலந்துரையாடல்

    • வருங்காலத்தில் தமிழகத்தில் நிலைநிறுத்தக்கூடிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • நிறை, குறைகள் இருக்கும் போது நான் உங்களிடம் கண்டிப்பாக கேட்பேன்.

    புதுக்கோட்டை

    தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி வாக்குச்சாவடி பாக நிலை முகவர்களுடன் காணொளி காட்சி மூலம் க லந்துரையாடல் நடத்தினார். இந்த கூட்டம் ஆலங்குடி தனியார் மாகாலில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.டி.தங்கமணி தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட துணைச்செயலாளர் ஞா.இளங்கோவன், தெற்கு ஒன்றிய செயலாளர் அரு வடிவேல், ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக பேசிய மு.க.ஸ்டாலின், வருங்காலத்தில் தமிழகத்தில் நிலைநிறுத்தக்கூடிய வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் அந்தந்த மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர்த, ஊராட்சி இவைகளில் உள்ள பாக நிலை இரண்டுக்கான நிலைய அலுவலர்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    மேலும் வரைவு வாக்காளர் திருத்தப்பட்டியல் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இன்றும் அந்த பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், இறந்தோர் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள பாக நிலை இரண்டில் உள்ள பொறுப்பாளர்கள் உடனடியாக அந்தந்த தேதிகளில் அதற்கு உண்டான படிவங்களை மக்களிடம் வழங்கவேண்டும்.

    வேலைகளை துரிதமாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் நீங்கள் தான் ஒருங்கிணைப்பு செய்து கொள்ள வேண்டும். நிறை, குறைகள் இருக்கும் போது நான் உங்களிடம் கண்டிப்பாக கேட்பேன். ஆகையினால் மாவட்ட நிர்வாகம் சொல்லக்கூடிய அறிவுரைகளை கேட்டு அதற்கு உண்டான உபகரணங்களை பெற்றுக் கொண்டு துரித வேலையில் ஈடுபட வேண்டும். வருங்கால தேர்தல் உங்கள் கையில் உள்ளது என்றும் ஆகையினால் வாக்குகளை சேகரிக்கும் பொறுப்பில் தற்போது முதலே நீங்கள் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    வாக்குச்சாவடி பாக நிலை 2-ல் உள்ள மாவட்ட, நகர, பேரூர் கழக கட்சி தலைவர்கள், ஒன்றி,ய நகர தலைர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கழக ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் ஏராளமா னோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×