என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்வழி பயிற்சி முகாம். GOOD WAY TRAINING CAMP"

    • கணபதிபுரம் ஊராட்சியில் புதுக்கோட்டை வேர்ல்ட் விஷன் இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டாடும் குடும்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.
    • கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூற வேண்டும்


    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கணபதிபுரம் ஊராட்சியில் புதுக்கோட்டை வேர்ல்ட் விஷன் இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டாடும் குடும்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியினை திட்ட மேலாளர் கிளாடில் ஏற்பாட்டில் கள ஒருங்கிணைப்பாளர் பிரதாப் பயிற்சி அளித்தார்.

    பயிற்சியில் அனைவருடைய குடும்பங்கள் சிறந்து விளங்கிட பின்பற்ற வேண்டிய குணங்கள், கைவிட வேண்டிய தீய பழக்க வழக்கங்கள், குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய காரியங்கள் என்ன என்றும், கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூற வேண்டும் எனவும், நிகழ்கால எதிர்கால கனவுகள் பற்றிய கருத்துக்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    பயிற்சியில் 42 குடும்பங்களை சேர்ந்த 84 நபர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியிற்கான முன்னேற்பாடுகளை கணபதிபுரத்தை சேர்ந்த மேனகா செந்தில்குமார் செய்திருந்தார்.





    ×